சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

மாணிக்க வாசகர்   
திருவாசகம்  

8 -th Thirumurai   8.101  
சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
பண் -  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvasagam2/01 Sivapuranam.mp3

Audio: https://sivaya.org/thiruvasagam2/01 Sivapuranam.mp3

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று,
சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[ 19]
திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! திருவைந் தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க! இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க! திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தி யினது திருவடி வாழ்க! ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க! ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க! மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக! பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக! தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாத வனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக! கைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக! கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக!/n ஈசனது திருவடிக்கு வணக்கம். எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம். ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம். சிவ பிரானது திருவடிக்கு வணக்கம். அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம். நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம். சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். தெவிட்டாத இன்பத்தைக் கொடுக் கின்ற மலைபோலும் கருணையையுடையவனுக்கு வணக்கம். நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட, அதனால் அவன் திருமுன்பு வந்து அடைந்து, நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கியபின், சிவபெரு மானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், அவ னுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி மனம் மகிழும்படியும், முன்னைய வினைமுழுமையும் கெடவும், சிவனது அநாதி முறைமையான பழமையை யான் சொல்லுவேன்./n வானமாகி நிறைந்தும் மண்ணாகி நிறைந்தும் மேலானவனே! இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி மனத்தைக் கடந்து அளவின்றி நிற்பவனே! உன்னுடைய மிக்க சிறப்பை, கொடிய வினையை உடையவனாகிய யான், புகழுகின்ற விதம் சிறிதும் அறி கிலேன். புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும் பல மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும், கல்லாகியும், மனிதராகியும், பேயாகியும், பூதகணங்களாகியும், வலிய அசுரராகி யும், முனிவராகியும், தேவராகியும் இயங்குகின்ற இந்த நிலையியற் பொருள் இயங்கியற் பொருள் என்னும் இருவகைப் பொருள் களுள்ளே எல்லாப் பிறவிகளிலும் பிறந்து, யான் மெலிவடைந்தேன். எம் பெருமானே! இப்பொழுது உண்மையாகவே, உன் அழகிய திருவடிகளைக் கண்டு வீடு பெற்றேன்./n நான் உய்யும்படி என் மனத்தில் பிரணவ உருவாய் நின்ற மெய்யனே! மாசற்றவனே! இடபவாகனனே! மறைகள், ஐயனே என்று துதிக்க உயர்ந்து ஆழ்ந்து பரந்த நுண் பொருளானவனே! வெம்மை யானவனே! தண்ணியனே! ஆன்மாவாய் நின்ற விமலனே! நிலையாத பொருள்கள் யாவும் என்னை விட்டு ஒழிய, குருவாய் எழுந்தருளி மெய்யுணர்வு வடிவமாய், விளங்குகின்ற உண்மை ஒளியே! எவ் வகை யான அறிவும் இல்லாத எனக்கு இன்பத்தைத் தந்த இறைவனே! அஞ்ஞானத்தின் வாதனையை நீக்குகின்ற நல்ல ஞானமயமானவனே! தோற்றம், நிலை, முடிவு என்பவை இல்லாதவனே! எல்லா உலகங்களையும் படைப்பாய்; நிலை பெறுத்துவாய்; ஒடுக்குவாய்; அருள் செய்வாய்; அடியேனைப் பிறவியிற் செலுத்துவாய்; உன் தொண்டில் புகப் பண்ணுவாய்; பூவின் மணம் போல நுட்பமாய் இருப்பவனே! தொலைவில் இருப்பவனே! அண்மையில் இருப்பவனே! சொல்லும் மனமும் கடந்து நின்ற வேதப் பொருளாய் உள்ளவனே! சிறந்த அன்பரது மனத்துள் கறந்த பாலும் சருக்கரையும் நெய்யும் கூடின போல இன்பம் மிகுந்து நின்று, எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எம் பெருமானே!/n ஐந்து நிறங்களை உடையவனே! தேவர்கள் துதிக்க அவர்களுக்கு ஒளித்து இருந்தவனே! எம் பெருமானே! வலிய வினையையுடையவனாகிய என்னை, மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் கட்டப்பெற்று, வெளியே தோலால் மூடி, எங்கும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை குலையும்படி, ஐம்புலன்களும் வஞ்சனை பண்ணுதலால் உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே மாசற்றவனே! உன்பொருட்டுப் பொருந்தின அன்பை உடையேனாய், மனம் கசிந்து உருகுகின்ற நன்மையில்லாத சிறியேனுக்குக் கருணைபுரிந்து பூமியின்மேல் எழுந்தருளி நீண்ட திருவடிகளைக் காட்டி, நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்குத் தாயினும் மேலாகிய அருள் வடிவான உண்மைப் பொருளே!/n களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த, பூப்போன்ற சுடரே! அளவிலாப் பேரொளியனே! தேனே! அரிய அமுதே! சிவபுரத்தை யுடையானே! பாசமாகிய தொடர்பையறுத்துக் காக்கின்ற ஆசிரியனே! அன்போடு கூடிய அருளைச் செய்து என் மனத்தில் உள்ள வஞ்சம் அழிய, பெயராமல் நின்ற பெருங்கருணையாகிய பெரிய நதியே! தெவிட்டாத அமிர்தமே! எல்லையில்லாத பெருமானே! ஆராயாதார் மனத்தில் மறைகின்ற ஒளியை யுடையானே! என் மனத்தை நீர் போல உருகச் செய்து என் அரிய உயிராய் நின்றவனே! சுகமும் துக்கமும் இயற்கையில் இல்லாதவனே! அன்பர் பொருட்டு அவைகளை உடையவனே! அன்பர்களிடத்து அன்புடைவனே! கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி, தன்மையினால் அல்லாதவனும் ஆகின்ற பேரொளியை யுடையவனே! நிறைந்த இருளானவனே! புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே! முதல்வனே! முடிவும் நடுவும் ஆகி அவையல்லாது இருப்பவனே! என்னை இழுத்து ஆட்கொண்டருளின எமது தந்தையாகிய சிவபெருமானே! மிகுந்த உண்மை ஞானத்தால் சிந்தித்து அறிபவர் மனத்தினாலும், எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய காட்சியே! ஒருவரால் நுட்பம் ஆக்குதல் இல்லாத இயற்கையில் நுட்பமாகிய அறிவே! போதலும் வருதலும் நிற்றலும் இல்லாத புண்ணியனே! எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே! காண்பதற்கரிய பெரிய ஒளியே! மகாநதி போன்ற இன்பப் பெருக்கே! அப்பனே! மேலோனே! நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும் சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகி யும் மாறுபடுதலையுடைய உலகத்தில் வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து, அறிவாய் விளங்கும் தெளிவானவனே! தெளி வின் தெளிவே! என் மனத்துள் ஊற்றுப் போன்ற பருகுதற்குப் ெபாருந்திய அமிர்தமே! தலைவனே!/n வெவ்வேறு விகாரங்களையுடைய ஊனாலாகிய உடம் பினுள்ளே தங்கிக் கிடக்கப்பெற்று ஆற்றேன் ஆயினேன். எம் ஐயனே! சிவனே! ஓ என்று முறையிட்டு வணங்கித் திருப்புகழை ஓதியிருந்து அறியாமை நீங்கி அறிவுருவானவர்கள் மறுபடியும் இவ்வுலகில் வந்து, வினைப் பிறவியையடையாமல், வஞ்சகத்தை யுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை அறுக்க வல்லவனே! நடு இரவில் கூத்தினைப் பலகாலும் பயிலும் தலைவனே! தில்லையுள் நடிப்பவனே! தென்பாண்டி நாட்டையுடையவனே! துன்பப் பிறப்பை அறுப்பவனே! ஓவென்று முறையிட்டுத் துதித்தற்கு அருமையானவனைத் துதித்து, அவனது திருவடியின் மீது பாடிய பாட்டின் பொருளையறிந்து துதிப்பவர், எல்லோரும் வணங்கித் துதிக்க, சிவநகரத்திலுள்ளவராய்ச் சிவபெருமானது திருவடிக்கீழ் சென்று நிலைபெறுவர்./n

Thevaaram Link  - Shaivam Link
திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் Sthala Pathigam
8.101   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
பண் -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.01   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி
பண் - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.02   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - II. அறிவுறுத்தல் (11-20)
பண் - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.03   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - III. சுட்டறுத்தல் (21-30)
பண் - வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.04   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - IV ஆன்ம சுத்தி (31-40)
பண் -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.05   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - V கைம்மாறு கொடுத்தல் (41-50)
பண் -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.06   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - VI அநுபோக சுத்தி (51-60)
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.07   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - VII. காருணியத்து இரங்கல் (61-70)
பண் -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.08   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் -VIII. ஆனந்தத்து அழுந்தல் (71-80)
பண் - ஈசனோடு பேசியது போதுமே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.09   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் -IX . ஆனந்த பரவசம் (81-90)
பண் -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.10   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - X. ஆனந்தாதீதம் (91-100)
பண் - ஹரிவராசனம்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.120   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
பண் - புறநீர்மை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.123   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
பண் - ஹரிவராசனம்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.124   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
பண் - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.125   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
பண் - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.126   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
பண் - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.127   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
பண் - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.128   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
பண் - அக்ஷரமணமாலை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.129   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அருட்பத்து - சோதியே சுடரே
பண் - அக்ஷரமணமாலை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.132   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.133   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.134   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்
பண் -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.136   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்
பண் - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.138   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.141   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அற்புதப்பத்து - மைய லாய்இந்த
பண் - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.142   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்
பண் -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.143   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவார்த்தை - மாதிவர் பாகன்
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.144   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   எண்ணப்பதிகம் - பாருருவாய
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.147   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
பண் - ஏரார் இளங்கிளியே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.148   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
பண் - ஏரார் இளங்கிளியே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.150   8 -th Thirumurai   மாணிக்க வாசகர்    திருவாசகம்   ஆனந்தமாலை - மின்னே ரனைய
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
12.900   12 -th Thirumurai   கடவுண்மாமுனிவர்   திருவாதவூரர் புராணம்  
பண் -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000