உத்தமனே! பத்தர் மனத்து உறையும் தேனே! உதயதிவா கரனே! என் உயிர் ஆய் நின் வித்தகனே! விடக்கு(கு) உடலில் கொழுநோய் தீர்க்கும் மிகுமருந்தே! விளக்கு(கு) ஒளி ஆய் முளைத்த சோதி! சித்தம் எனும் திண் கடலில்-திளைத்து நீந்தித் திசை அறியா மரக்கலம் போல் வினாவிக் கீண்டு(டு) இங்கு(கு) அத்தலத்தே எடுத்து(து) அவனி விளங்கத் தோன்றும் ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
[ 5]
This page was last modified on Thu, 13 Aug 2026 07:11:09 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this
WhatsApp Group