![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.061 மாதினை ஓர் கூறு உகந்தாய்! பண் - திருத்தாண்டகம் (திருக்கன்றாப்பூர் நடுதறிநன்னாயகர் மாதுமைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=L9HI-AlEwBY |
திருதிமையால் ஐவரையும் காவல் ஏவி, திகையாதே, சிவாய நம என்னும் சிந்தைச் சுருதிதனைத் துயக்கு அறுத்து, துன்ப வெள்ளக்-கடல் நீந்திக் கரை ஏறும் கருத்தே மிக்கு, பருதி தனைப் பல் பறித்த பாவநாசா! பரஞ்சுடரே! என்று என்று பரவி, நாளும் கருதி மிகத் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!. | [ 8] |
மேலே செல் |
6.061
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதினை ஓர் கூறு உகந்தாய்! பண் - திருத்தாண்டகம் (திருக்கன்றாப்பூர் நடுதறிநன்னாயகர் மாதுமைநாயகியம்மை) |