சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  

Naayanmaar Guru Puja Days - நாயன்மார்கள் குரு பூசை தினங்கள்

Naayanmaar Puja Month & Natchathiram Period CE Possible English Date (Experimental) ThiruThondu
кан̣н̣аппар на̄йан̱а̄р Thai - Mirugasirisham 300-600 2027-01-20   பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.
каликкампар на̄йан̱а̄р Thai - Revathi 600-840 2027-01-15   முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்த மனைவியின் கையை வெட்டியவர்.
аппӯти ат̣икал̤ Thai - Sathayam 600-660 திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்து வைத்தவர். பின் இறந்த மகனை சிவன் அருளால் உயிர் பெற செய்தவர்.
арива̄т̣т̣а̄йар на̄йан̱а̄р Thai - Thiruvathiraia 300-600 2027-01-20   சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.
чан̣т̣эчура на̄йан̱а̄р Thai - Uthiram 300-600 2027-01-26   சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உதைத்த தந்தையின் காலை வெட்டியவர்.
тирунӣлакан̣т̣а на̄йан̱а̄р Thai - Visakam 600-840 2027-01-30   கூடா நட்பின் விளைவால் மனைவியை இளம் வயது முதல் தீண்டவில்லை. முதுமை காலத்தில் மனைவியாருடன் கோல் பிடித்து குளத்தில் முழுகி சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.
э̆р̱ипаттар на̄йан̱а̄р Maasi - Hastham 300-600 2026-03-05   சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். மன்னன் சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், அவனிடமிருந்து வாள் பெற்று தன் கழுத்தை வெட்டக் கொள்ள துணிந்தவர்.
ка̄ри на̄йан̱а̄р Maasi - Pooradam 600-840 2026-03-13   காரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.
коччэ̆н̇кат̣ чол̱ар Maasi - Sathayam 300-600 முற்பிறவியில் சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய் பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம் மாடக்கோவிலாகக் கட்டினார்.
мун̱аийат̣ува̄р на̄йан̱а̄р Panguni - Poosam 600-840 2026-03-28   அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்கள் அனைவருக்கும் உணவு அளித்தார்.
нэчар Panguni - Rohini 600-840 2026-03-24  
тан̣т̣и ат̣икал̤ Panguni - Sathayam 300-600 2026-03-17   2026-04-14   கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர். சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.
ка̄раикка̄л аммаийа̄р Panguni - Swathi 300-600 2026-04-04   இறைவனின் அருளால் கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.
кан̣ана̄тар на̄йан̱а̄р Panguni - Thiruvathiraia 600-840 2026-03-26   சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.
чир̱утто̆н̣т̣ар на̄йан̱а̄р Chiththirai - Bharani 600-660 2026-04-18   2026-05-16   பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.
нин̱р̱ачӣр нэ̆т̣ума̄р̱ан̱а̄р Aippasi - Bharani 600-660 2026-04-18   2026-05-16   திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தை வளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.
ичаин̃а̄н̱ийа̄р Chiththirai - Chithirai 840-865 2026-04-30   சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.
ман̇каийарккарачийа̄р Chiththirai - Rohini 600-660 2026-04-20   சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும்படி செய்த அம்மையார்.
тируна̄вуккарачар Chiththirai - Sathayam 560-660 2026-04-14   2026-05-11   தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.
тируккур̱иппут то̆н̣т̣ар Chiththirai - Swathi 600-840 2026-05-01   சிவ தொண்டர் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால் குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.
вир̱алмин̣т̣ар на̄йан̱а̄р Chiththirai - Thiruvathiraia 840-865 2026-04-22   சிவ பக்தர்களை வணங்காத காரணத்தினால் சுந்தாரை கடிந்து ஏசியவர். சுந்தரர் திருத்தொண்டர்தொகை பாட காரணமாக விளங்கியவர்.
чома̄чима̄р̱ар на̄йан̱а̄р Vaikaasi - Ayilyam 840-865 2026-05-22   நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர். லோகம் சுபிட்சம் பெற பல சிவ யாகங்கள் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.
кал̱ар̱чин̇ка на̄йан̱а̄р Vaikaasi - Bharani 840-865 2026-05-16   2026-06-12   சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.
мурука на̄йан̱а̄р Vaikaasi - Moolam 600-660 2026-06-02   வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாலும் பாமாலையாலும் அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.
тирунӣланаккар на̄йан̱а̄р Vaikaasi - Moolam 600-660 2026-06-02   திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில் சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர். ஈசன் கனவில் காட்சியளித்தது அருள் புரிந்தார்.
тирун̃а̄н̱ачампантар Vaikaasi - Moolam 600-660 2026-06-02   பார்வதி அம்மையிடம் ஞானப்பால் பெற்று ஞானக்குழந்தையாக பல அற்புதங்கள் செய்தவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப்பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.
тирунӣлакан̣т̣а йа̄л̱ппа̄н̣ар Vaikaasi - Moolam 600-660 2026-06-02   ஞானசம்பந்தருடன் பாடல்களுக்கு யாழ் இசைத்து சிவனைப் போற்றியவர்.
наминанти ат̣икал̤ Vaikaasi - Poosam 300-600 2026-05-21   ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.
ма̄н̣иккава̄чакар Aani - Magam 200-300 2026-06-19  
амарнӣтийа̄р на̄йан̱а̄р Aani - Pooram 300-600 2026-06-20   சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக, தன்னுடைய சொத்தையும், குடும்பத்தையும் தந்தவர்.
эн̱а̄тина̄тар на̄йан̱а̄р Aani - Revathi 840-865 2026-07-08   கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக் கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.
пэ̆румил̱алаик кур̱умпар Aadi - Chithirai 840-865 2026-07-21   சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர். சுந்தரருடன் கயிலை சென்றவர்.
мӯртти на̄йан̱а̄р Aadi - Karthigai 300-600 2026-08-07   சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு உருத்திராட்சம் சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்.
пукал̱ччол̱а на̄йан̱а̄р Aadi - Karthigai 600-840 2026-08-07   எறிபத்தர் தவறு செய்த தனது யானையை கொன்றார் என அறிந்து சிவனாடியாரிடம் சென்று சிவனை நினைத்து தன் தலையை அறுத்து யாகத்தில் உயிர் துறந்தவர்.
калийар на̄йан̱а̄р Aadi - Kettai 600-840 2026-07-25   வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசு இல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.
кот̣пули на̄йан̱а̄р Aadi - Kettai 840-865 2026-07-25   சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் தலைகளைக் கொய்தவர்.
чэрама̄н̱ пэ̆рума̄л̤ Aadi - Swathi 840-865 2026-07-22   சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.
чунтарамӯртти на̄йан̱а̄р Aadi - Swathi 840-865 2026-07-22   தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். திருத்தொண்டத்தொகை பாடினார்.
кӯр̱р̱увар на̄йан̱а̄р Aadi - Thiruvathiraia 300-600 2026-07-13   2026-08-09   நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால் வாய்ப்புக் கிடைக்காததால் தன் சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.
кулаччир̱аийа̄р на̄йан̱а̄р Aavani - Anusham 600-660 2026-08-20   பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.
атипаттар на̄йан̱а̄р Aavani - Ayilyam 600-840 2026-09-09   வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். ஒரே ஒரு பொன் மீன் கிடைத்தும் அதையும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.
пукал̱ттун̣аи на̄йан̱а̄р Aavani - Ayilyam 300-600 2026-09-09   வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின் பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.
ил̤аийа̄н̱кут̣има̄р̱а на̄йан̱а̄р Aavani - Magam 600-840 2026-08-13   2026-09-10   நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் தன்னுடைய வீட்டுக் அறுத்தவர். விறகாக கூரையை சிவனடியாருக்கு உணவு தந்தவர்.
кун̇кивийаккалайар на̄йан̱а̄р Aavani - Moolam 600-660 2026-08-23   சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.
чэ̆руттун̣аи на̄йан̱а̄р Aavani - Poosam 840-865 2026-09-08   சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.
уруттирапачупати на̄йан̱а̄р Purattasi - Aswini 600-840 2026-09-28   கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.
тируна̄л̤аиппова̄р (нантан̱а̄р) Purattasi - Rohini 600-840 2026-10-01   தாழ்ந்த குலமென்பதால் கோவிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன் தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் சென்று ஈசன் அருள் பெற்றவர்.
нарачин̇ка мун̱аийараийар Purattasi - Sathayam 840-865 2026-09-24   சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். சிவனாடியர்களுக்கு பொன் கொடுத்தவர்.
эйаркон̱ каликка̄мар Purattasi - Uthiram 600-840 2026-10-09   இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.
пӯчала̄р на̄йан̱а̄р Ayppasi - Anusham 600-840 2026-10-14   2026-11-10   பொருள் இல்லாததால் மனதில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற்கோயிலை விட்டு இறைவன் முதலில் பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.
тирумӯлар на̄йан̱а̄р Ayppasi - Aswini 300-600 2026-10-26   சித்தர். திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார். இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்ததால் திருமூலர்.
ит̣ан̇кал̱и на̄йан̱а̄р Ayppasi - Karthigai 600-840 2026-10-28   அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.
аийат̣икал̤ ка̄т̣аваркон̱ Ayppasi - Moolam 300-600 2026-10-16   2026-11-13   மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.
чатти на̄йан̱а̄р Ayppasi - Poosam 600-840 2026-11-01   சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.
а̄н̱а̄йар на̄йан̱а̄р Karththikai - Hastham 600-840 2026-12-03   புல்லாங்குழல் ஓசையில் பக்தியை வெளிப்படுத்தியவர்.
кан̣ампуллар на̄йан̱а̄р Karththikai - Karthigai 300-600 2026-11-24   விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்.
мӯрккар на̄йан̱а̄р Karththikai - Moolam 600-840 2026-11-13   2026-12-10   சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தவர்.
чир̱аппули на̄йан̱а̄р Karththikai - Pooradam 600-840 2026-11-14   2026-12-11   சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.
мэ̆йппо̆рул̤ на̄йан̱а̄р Karththikai - Uthiram 600-840 2026-12-02   தன்னுடைய பகைவன் போலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும் சாகும் தறுவாயிலும் சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்.
ча̄ккийар на̄йан̱а̄р Markazi - Pooradam 300-600 2027-01-07   அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர். இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.
ва̄йила̄р на̄йан̱а̄р Markazi - Revathi 600-840 2026-12-19   2027-01-15   இறைவனை எப்போதும் நினைத்து அமைதியாக வழிபட்டார். சிவபெருமானுடைய அருள் பெற்றார்.
ма̄н̱аккан̃чар̱а̄р на̄йан̱а̄р Markazi - Swathi 840-865 2027-01-02   தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும் சிவனடியார் கேட்க மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.
чат̣аийан̱а̄р на̄йан̱а̄р Markazi - Thiruvathiraia 840-865 2026-12-24   சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.
ийар̱пакаи на̄йан̱а̄р Markazi - Uthiram 600-840 2026-12-30   சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை, முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Fri, 20 Feb 2026 03:20:43 +0000