மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின், சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள், மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல், மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச
|
[2713.0] |
துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம், என்னும் விதானத்தைன் கீழால், - இருசுடரை மின்னும் விளக்காக ஏற்றி, மறிகடலும் பன்னு திரைக்கவரி வீச, - நிலமங்கை
|
[2714.0] |
தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல், மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன், என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, - மழைக்கூந்தல் தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்
|
[2715.0] |
Back to Top |
என்னும் இவையே முலையா வடிவமைந்த, அன்ன நடைய அணங்கே, - அடியிணையைத் தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர் உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட
|
[2716.0] |
பின்னை,தன் னாபி வலயத்துப் பேரொளிசேர், மன்னிய தாமரை மாமலர்ப்பூத்து, அம்மலர்மேல் முன்னம் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள், - அம்மறைதான்
|
[2717.0] |
மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில், நன்னெறிமேம் பட்டன நான்கன்றே, - நான்கினிலும் பின்னையது பின்னைப் பெயர்த்தரு மென்பது,ஓர் தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்
|
[2718.0] |
என்னும் இவையே _கர்ந்துடலம் தாம்வருந்தி, துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், - வெஞ்சுடரோன் மன்னும் அழல்_கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும், பெரிய திருமடல் இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து
|
[2719.0] |
தொன்னெறிக்கட் சென்றார் எனப்படும் சொல்லல்லால், இன்னதோர் காலத் தினையா ரிதுபெற்றார், என்னவும் கேட்டறிவ தில்லை - உளதென்னில் மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்,
|
[2720.0] |
Back to Top |
அன்னதோர் இல்லியி னூடுபோய், - வீடென்னும் தொன்னெறிக்கட் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே, அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,ஆங் கன்னவரைக் கற்பிப்போம் யாமே?, - அதுநிற்க
|
[2721.0] |
முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற, அன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன், பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப, - பொங்கொளிசேர் கொன்னவிலும் கோளரிமாத் தாஞ்சுமந்த கோலம்சேர்
|
[2722.0] |
மன்னிய சிங்கா சனத்தின்மேல், - வாணொடுங்கண் கன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து,ஆங் கின்னளம்பூந் தென்றல் இயங்க, - மருங்கிருந்த மின்னனைய _ண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்
|
[2723.0] |
முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப, அன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர், பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம், மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை
|
[2724.0] |
இன்னைசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர், மன்னிய மாமயில்போல் கூந்தல், - மழைத்தடங்கண் மின்னிடையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து, மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்
|
[2725.0] |
Back to Top |
மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த, மன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள், அன்ன நடைய அரம்பயர்த்தம் வகைவளர்த்த இன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று, - இருவிசும்பில்
|
[2726.0] |
மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய், மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல், மன்னும் மளிவிளக்கை மாட்டி, - மழைக்கண்ணார் பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
|
[2727.0] |
துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப, அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச், சின்ன நறுந்தாது சூடி, - ஓர் மந்தாரம் துன்னும் நறுமலரால் தோள்கொட்டி, கற்பகத்தின்
|
[2728.0] |
மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர இன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல் நன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, - தாங்கருஞ்சீர் மின்னிடைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல்
|
[2729.0] |
பொன்னரும் பாரம் புலம்ப, - அகங்குழைந்தாங் கின்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார், அன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல், இன்னமுதம் மாந்தி யிருப்பர், - இதுவன்றே
|
[2730.0] |
Back to Top |
அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும் அன்ன திறத்ததே ஆதலால், - காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின் அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்
|
[2731.0] |
மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும், தென்னுறையில் கேட்டறிவ துண்டு, - அதனை யாம்தெளியோம், மன்னும் வடநெறியே வேண்டினோம்-வேண்டாதார் தென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின்,.0
|
[2732.0] |