| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
பெரியதிருவந்தாதி (2590.0)
மூன்றாம் ஆயிரம்
இயற்பா
நம்மாழ்வார் - பெரியதிருவந்தாதி
Songs from 2590.0 to 2671.0 ( காஞ்சிபுரம் )
Pages:
1
2
3
4
5
Next
நெறி காட்டி நீக்குதியோ? நின்பால் கரு மா
முறி மேனி காட்டுதியோ? மேல் நாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய்? கண்ணனே ஈது உரையாய்
என் செய்தால் என் படோம் யாம்?
[2590.0]
யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார் பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்துப் பார் இடந்த
அம்மா! நின் பாதத்து அருகு
[2591.0]
அருகும் சுவடும் தெரிவு உணரோம் அன்பே
பெருகும் மிக இது என்? பேசீர் பருகலாம்
பண்புடையீர் பார் அளந்தீர் பாவியெம் கண் காண்பு அரிய
நுண்பு உடையீர்! நும்மை நுமக்கு
[2592.0]
Go to Top
நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்து என்? மாலார்
தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர்திறத்தே
யாதானும் சிந்தித்து இரு
[2593.0]
இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு
ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு
யாம் ஆர்? வணக்கம் ஆர்? ஏ பாவம் நல் நெஞ்சே
நாமா மிக உடையோம் நாழ்
[2594.0]
நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை
வாழாவகை வலிதல் நின் வலியே? ஆழாத
பாரும் நீ வானும் நீ காலும் நீ தீயும் நீ
நீரும் நீ ஆய் நின்ற நீ
[2595.0]
நீ அன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போய் ஒன்று சொல்லி என்? போ நெஞ்சே நீ என்றும்
காழ்த்து உபதேசம் தரினும் கைக்கொள்ளாய் கண்ணன்தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு
[2596.0]
Go to Top
வழக்கொடு மாறுகோள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டும் இறைவ இழப்பு உண்டே?
எம் ஆட்கொண்டு ஆகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மால் காட்டு உன் மேனிச் சாய்
[2597.0]
சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயர் ஆய் நீ யார்? போய்த்
தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம்
பாம்பார் வாய்க் கைந் நீட்டல் பார்த்து
[2598.0]
பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம்
தம் மேனித் தாள் தடவ தாம் கிடந்து தம்முடைய
செம்மேனிக் கண்வளர்வார் சீர்
[2599.0]
சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆகாக்கால் பேராளா மார்பு ஆரப்
புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே?
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து
[2600.0]
Go to Top
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய்திறவார் சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய
தாள் வரை வில் ஏந்தினார் தாம்
[2601.0]
தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளகப்
பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இப்
பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல் உருவை யார் அறிவார்? சொல்லு
[2602.0]
சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே
எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லைக்கண்
மாத் தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறு ஆகக்
காத்தானைக் காண்டும் நீ காண்
[2603.0]
காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில்! மாணி
உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
திரு ஆகம் தீண்டிற்றுச் சென்று
[2604.0]
Go to Top
சென்று அங்கு வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்குப்
பார் உருவும் பார் வளைத்த நீர் உருவும் கண் புதையக்
கார் உருவன் தான் நிமிர்த்த கால்
[2605.0]
காலே பொதத் திரிந்து கத்துவராம் இனநாள்
மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால்
தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று
இருக்கும் இடம் காணாது இளைத்து
[2606.0]
இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ் உயிர்க்கும் தான்
[2607.0]
தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஒன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தன் தோன்றல் தானே
இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்?
[2608.0]
Go to Top
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே? சீர் ஆர்
மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான்
[2609.0]
Other Prabandhams:
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:45 +0000