சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

மூன்றாம் ஆயிரம்   திருமழிசை ஆழ்வார்  
நான்முகன் திருவந்தாதி - இயற்பா  

Songs from 2382.0 to 2477.0   ( )
மூன்றாம் ஆயிரம்   திருமங்கை ஆழ்வார்  
திரு எழு கூற்றிருக்கை - இயற்பா  

Songs from 2672.0 to 2672.0   ( )
மூன்றாம் ஆயிரம்   திருமங்கை ஆழ்வார்  
சிறிய திருமடல் - இயற்பா  

Songs from 2673.0 to 2712.0   ( )
மூன்றாம் ஆயிரம்   திருமங்கை ஆழ்வார்  
பெரிய திருமடல் - இயற்பா  

Songs from 2713.0 to 2790.0   ( )
மூன்றாம் ஆயிரம்   திருவரங்கத்தமுதனார்  
இராமானுச நூற்றந்தாதி - இயற்பா  

Songs from 2791.0 to 2898.0   ( )
இயற்பா (2791.0)    
Pages:    1    2  Next
பிள்ளைத் திருநறையூர் அரையர் அருளிச்செய்தது




[2713.1]
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே




[2710.0]
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்




[2708.0]
Go to Top
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை




[2707.0]
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு




[2706.0]
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன்




[2705.0]
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும்




[2704.0]
Go to Top
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள்




[2703.0]
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன்




[2701.0]
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்




[2700.0]
Go to Top
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன்




[2699.0]
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார்




[2698.0]
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர்வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று ஆரானும் அல்லனே என்றுஒழிந்தாள்



[2696.0]
Go to Top
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று




[2695.0]
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த்
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு




[2694.0]
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக




[2693.0]
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு




[2688.0]
Go to Top
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த




[2685.0]
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்




[2684.0]
Go to Top
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்




[2683.0]
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்




[2682.0]
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு




[2681.0]
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்




[2679.0]
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே




[2677.0]
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்




[2675.0]
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று




[2674.0]
கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்




[2673.0]
மிக்க விறைநிலையும் மெய்யாமுயிர்நிலையும்
தக்கநெறியும் தடையாகித் - தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசைவேதத்தியல்.




[2675.6]
சொட்டைநம்பிகள்அருளிச்செய்தது
மனத்தாலும்வாயாலும் வண்குருகூர்பேணும்
இனத்தாரையல்லாதிறைஞ்சேன் - தனத்தாலும்
ஏதுங்குறைவிலேன் எந்தைசடகோபன்
பாதங்கள்யாமுடையபற்று.



[2675.3]
பிள்ளை திருநறையூரரையர் அருளிச்செய்தது




[2674.1]
மன்னியபல்பொறிசேர் ஆயிரவாய்வாளரவின்
சென்னிமணிக்குடுமித் தெய்வச்சுடர்நடுவுள்
மன்னியநாகத்தணைமேல் ஓர்மாமலைபோல்
மின்னுமணிமகரகுண்டலங்கள் வில்வீச
துன்னியதாரகையின் பேரொளிசேராகாசம்
என்னும்விதானத்தின்கீழால் இருசுடரை

மன்னும் விளக்காகவேற்றி மறிகடலும்
பன்னுதிரைக்கவரிவீச நிலமங்கை

தன்னைமுனநாள் அளவிட்டதாமரைபோல்
மன்னியசேவடியை வானியங்குதாரகைமீன்

என்னும்மலர்ப்பிறையாலேய்ந்த மழைக்கூந்தல்
தென்னனுயர்பொருப்பும் தெய்வவடமலையும்

என்னுமிவையே முலையாவடிவமைந்த
அன்னநடையவணங்கே அடியிணையைத்

தன்னுடையவங்கைகளால் தான்தடவத்தான்கிடந்து ஓர்
உன்னியயோகத்து உறக்கந்தலைக்கொண்ட

பின்னை தன்னாபிவலயத்துப் பேரொளிசேர்
மன்னியதாமரை மாமலர்ப்பூத்து அம்மலர்மேல்

முன்னந்திசைமுகனைத் தான்படைக்க மற்றவனும்
முன்னம்படைத்தனன் நான்மறைகள் அம்மறைதான்

மன்னுமறம் பொருளின்பம் வீடென்று உலகில்
நன்னெறிமேம்பட்டன நான்கன்றே நான்கினிலும்

பின்னையது பின்னைப்பெயர்த்தருமென்பது ஓர்
தொன்னெறியைவேண்டுவார் வீழ்கனியுமூழிலையும்

என்னுமிவையே நுகர்ந்து உடலம்தாம்வருந்தி
துன்னுமிலைக்குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன்

மன்னுமழல் நுகர்ந்தும் வண்தடத்தினுட் கிடந்தும்
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம்விட்டெழுந்து

தொன்னெறிக்கட்சென்றா ரெனப்படுஞ்சொல்லல்லால்
இன்னதோர்காலத்து இனையாரிது பெற்றார்

என்னவுங் கேட்டறிவதில்லை உளதென்னில்
மன்னுங்கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்

அன்னதோரில்லியினூடுபோய் வீடென்னும்
தொன்னெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே

அன்னதேபேசும் அறிவில் சிறுமனத்து ஆங்
கன்னவரைக் கற்பிப்போம்யாமே அதுநிற்க

முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற
அன்னவர்த்தாம்காண்டீர்கள் ஆயிரக்கண்வானவர்கோன்

பொன்னகரம்புக்கமரர் போற்றிசைப்ப பொங்கொளிசேர்
கொல்நவிலுங்கோளரிமாத் தாஞ்சுமந்தகோலம்சேர்

மன்னியசிங்காசனத்தின்மேல் வாள்நெடுங்கண்
கன்னியராலிட்ட கவரிப்பொதியவிழ்ந்து ஆங்

கின்னிளம்பூந்தென்றலியங்க மருங்கிருந்த
மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்

முன்னம்முகிழ்த்த முகிழ்நிலாவந்தரும்ப
அன்னவர்த்தம்மானோக்க முண்டாங்கணிமலர்சேர்
பொன்னியல்கற்பகத்தின் காடுடுத்தமாடெல்லாம்
மன்னியமந்தாரம் பூத்தமதுத்திவலை

இன்னிசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னியமாமயில்போற்கூந்தல் மழைத்தடங்கண்

மின்னிடையாரோடும் விளையாடிவேண்டிடத்து
மன்னும்மணித்தலத்து மாணிக்கமஞ்சரியின்
மின்னினொளிசேர் பளிங்குவிளிம்படுத்த
மன்னும்பவளக்கால் செம்பொன் செய்மண்டபத்துள்

அன்னநடைய அரம்பயர்த்தம்வகை வளர்த்த இன்னிசை யாழ்பாடல்கேட்டின்புற்று இருவிசும்பில்

மன்னுமழைதழும் வாணிலாநீண்மதிதோய்
மின்னினொளிசேர் விசும்பூரும்மாளிகைமேல்

மன்னுமணி விளக்கைமாட்டி மழைக்கண்ணார்
பன்னுவிசித்திரமாப் பாப்படுத்தபள்ளிமேல்

துன்னியசாலேகம் சூழ்கதவம்தாள் திறப்ப
அன்னமுழக்க நெறிந்துக்கவாள்நீலச்

சின்னநறுந்தாது சூடி ஓர்மந்தாரம்
துன்னுநறுமலரால் தோள்கொட்டி கற்பகத்தின்

மன்னுமலர்வாய் மணிவண்டுபின்தொடர இன்னிளம்பூந்தென்றல் புகுந்தீங்கிளமுலைமேல்
நன்னறுஞ்சந்தனச்சேறு புலர்த்த தாங்கருஞ்சீர்
மின்னிடைமேல் கைவைத்திருந்து ஏந்திளமுலைமேல்

பொன்னரும்பாரம்புலம்ப அகங்குழைந்தாங்கு
இன்னவுருவின் இமையாத்தடங்கண்ணார்

அன்னவர்த்தம்மானோக்கமுண்டு ஆங்கணிமுறுவல்
இன்னமுதம் மாந்தியிருப்பர் இதுவன்றே
அன்னவறத்தின் பயனாவது ஒண்பொருளும்
அன்னதிறத்ததே யாதலால் காமத்தின்

மன்னும்வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின்
அன்னநடையாரலரேச ஆடவர்மேல்

மன்னும்மடலூரா ரென்பதோர்வாசகமும்
தென்னுரையில் கேட்டறிவதுண்டு அதனையாம் தெளியோம்

மன்னும் வடநெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன்பொதியில் செழுஞ்சந்தனக்குழம்பின்
அன்னதோர் தன்மையறியாதார் ஆயன்வேய்
இன்னிசை யோசைக்கு இரங்காதார் மால்விடையின்

மன்னுமணி புலம்பவாடாதார் பெண்ணைமேல்
பின்னும் அவ்வன்றிற்பேடைவாய்ச் சிறுகுரலுக்கு

உன்னியுடலுருகிநையாதார் உம்பவர்வாய்த்
துன்னிமதியுகுத்த தூதிலா நீள்நெருப்பில்

தம்முடலம்வேவத் தளராதார் காமவேள்
மன்னுஞ்சிலைவாய் மலர்வாளிகோத்தெய்ய
பொன்னொடுவீதிபுகாதார் தம்பூவணைமேல்
சின்னமலர்க்குழலும் அல்குலும்மென்முலையும்

இன்னிளவாடைதடவத் தாம்கண்துயிலும்
பொன்னனையார் பின்னுந்திருவுறுக போர்வேந்தன்

தன்னுடையதாதை பணியாலரசொழிந்து
பொன்னகரம் பின்னேபுலம்ப வலங்கொண்டு

மன்னும்வளநாடு கைவிட்டு மாதிரங்கள்
மின்னுருவில் விண்தேர் திரிந்துவெளிப்பட்டு
கல்நிறைந்துதீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று
பின்னுந்திரைவயிற்றுப் பேயேதிரிந்துலவா
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடுங்கதிரோன்
துன்னுவெயில்வறுத்த வெம்பரல்மேல் பஞ்சடியால்
மன்னனிராமன்பின் வைதேவிஎன்றுரைக்கும்
அன்னநடைய அணங்குநடந்திலளே?

பின்னும்கருநெடுங்கண் செவ்வாய்ப்பிணைநோக்கின்
மின்னனையநுண்மருங்குல் வேகவதியென்றுரைக்கும்

கன்னி தன் இன்னுயிராம் காதலனைக்காணது
தன்னுடைய முன்தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு

அன்னவனை நோக்காது அழித்துரப்பி வாளமருள்
கல்நவில்தோள்காளையைக் கைப்பிடித்துமீண்டும்போய்

பொன்னவிலுமாகம் புணர்ந்திலளே? பூங்கங்கை
முன்னம் புனல்பரக்கும் நல்நாடன் மின்னாடும்

கொன்னவிலும்நீள்வேல் குருக்கள் குலமதலை
தன்னிகரொன்றில்லாத வென்றித்தனஞ்சயனை

பன்னாகராயன் மடப்பாவை பாவைதன்
மன்னியநாணச்சம் மடமென்றிவையகல

தன்னுடைய கொங்கை முகம்நெரிய தானவன்தன்
பொன்வரையாகம் தழீஇக்கொண்டுபோய் தனது

நல்நகரம்புக்கு நயந்தினிதுவாழ்ந்ததுவும்
முன்னுரையில் கேட்டறிவதில்லையே? சூழ்கடலுள்

பொன்னகரஞ்செற்ற புரந்தரனோடேரொக்கும்
மன்னவன்வாணன் அவுணர்க்குவாள்வேந்தன்

தன்னுடையபாவை உலகத்துத்தன்னொக்கும்
கன்னியரையில்லாத காட்சியாள் தன்னுடைய

இன்னுயிர்த்தோழியால் எம்பெருமானீன்துழாய்
மன்னும்மணிவரைத்தோள் மாயவன் பாவியேன்

என்னையிதுவிளைத்த ஈரிரண்டுமால்வரைத்தோள்
மன்னவன்தன்காதலனை மாயத்தாற்கொண்டுபோய்

கன்னிதன்பால்வைக்க மற்றவனோடெத்தனையோ
மன்னியபேரின்பமெய்தினாள் மற்றிவைதான்

என்னாலேகேட்டீரே? ஏழைகாள்! என்னுரைக்கேன்?
மன்னுமலையரயன் பொற்பாவை வாள்நிலா

மின்னுமணிமுறுவல் செவ்வாயுமையென்னும்
அன்னநடைய அணங்கு நுடங்கிடைசேர்

பொன்னுடம்புவாடப் புலனைந்தும்நொந்தகல
தன்னுடையகூழைச் சடாபாரம்தாந்தரித்து ஆங்கு
அன்னவருந்தவத்தினூடுபோய் ஆயிரந்தோள்
மன்னுகரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்

மின்னியெரிவீச மேலெடுத்தசூழ்கழற்கால்
மன்னுகுலவரையும் மாருதமும்தாரகையும்
தன்னினுடனே சுழலச்சுழன்றாடும்

கொல்நவிலும் மூவிலைவேல் கூத்தன்பொடியாடி
அன்னவன்தன் பொன்னகலம் சென்றாங்கணைந்திலளே?

பன்னியுரைக்குங்கால் பாரதமாம் பாவியேற்கு
என்னுறுநோய் யானுரைப்பக்கேண்மின் இரும்பொழில்சூழ்

மன்னுமறையோர் திருநறையூர்மாமலைபோல்
பொன்னியலுமாடக் கவாடம்கடந்துபுக்கு

என்னுடையகண்களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன்திருமர்பும் வாயுமடியிணையும்

பன்னுகரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன்னியல்காடு ஓர்மணிவரைமேல்பூத்ததுபோல்
மின்னியொளிபடைப்ப வீழ்நாணும்தோள்வளையும்
மன்னியகுண்டலமும் ஆரமும்நீண்முடியும்

துன்னுவெயில்விரித்த சூளாமணியிமைப்ப
மன்னும்மரதகக் குன்றின்மருங்கே ஓர்

இன்னிளவஞ்சிக் கொடியொன்றுநின்றதுதான்
அன்னமாய்மானாய் அணிமயிலாய்ஆங்கிடையே

மின்னாய்இளவேயிரண்டாய் இணைச்செப்பாய்
முன்னாயதொண்டையாய்க் கொண்டைகுலமிரண்டாய்
அன்னதிருவுருவம் நின்றதறியாதே
என்னுடையநெஞ்சும் அறிவும்இனவளையும் பொன்னியலும்மேகலையும் ஆங்கொழியப்போந்தேற்கு
மன்னும்மறிகடலுமார்க்கும் மதியுகுத்த

இன்னிலாவின்கதிரும் என்தனக்கேவெய்தாகும்
தன்னுடையதன்மை தவிரத்தானெங்கொலோ?

தென்னன்பொதியில் செழுஞ்சந்தின்தாதளைந்து
மன்னிவ்வுலகை மனங்களிப்பவந்தியங்கும்
இன்னிளம்பூந்தென்றலும் வீசுமெரியெனக்கே
முன்னியபெண்ணைமேல் முள்முளரிக்கூட்டகத்து

பின்னுமவ்வன்றில் பேடைவாய்ச்சிறுகுரலும்
என்னுடையநெஞ்சுக்கு ஓரீர்வாளாம் என்செய்கேன்?

கல்நவில்தோள்காமன் கருப்புச்சிலைவளைய
கொல்நவிலும்பூங்கணைகள் கோத்துப்பொதவணைந்து

தன்னுடையதோள்கழியவாங்கி தமியேன்மேல்
என்னுடையநெஞ்சே இலக்காகவெய்கின்றான்

பின்னிதனைக் காப்பீர்தானில்லையே பேதையேன்
கன்நவிலுங்காட்டகத்து ஓர்வல்லிக்கடிமலரின்
நன்நறுவாசம் மற்றாரானுமெய்தாமே
மன்னும்வறுநிலத்து வாளாங்குகுத்ததுபோல்
என்னுடையபெண்மையும் என்நலனும்என்முலையும்
மன்னுமலர்மங்கைமைந்தன் கணபுரத்துப்

பொன்மலைபோல்நின்றவன்தன்பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான்? வாளாஎனக்கேபொறையாகி

முன்னிருந்துமூக்கின்று மூவாமைக்காப்பதோர்
மன்னும்மருந்தறிவிரில்லையே? மல்விடையின்

துன்னுபிடரெருத்துத் தூக்குண்டு வன்தொடரால்
கன்னியர்கண்மிளிரக் கட்டுண்டு மாலைவாய்
தன்னுடையநாவொழியாது ஆடுந்தனிமணியின்
இன்னிசையோசையும் வந்தென்செவிதனக்கே

கொன்நவிலுமெஃகின் கொடிதாய்நெடிதாகும்
என்னிதனைக்காக்குமா? சொல்லீர் இதுவிளைத்த

மன்னன்நறுந்துழாய்வாழ்மார்பன் மாமதிகோள்
முன்னம்விடுத்த முகில்வண்ணன் காயாவின்

சின்னநறும்பூந் திகழ்வண்ணன் வண்ணம்போல்
அன்னகடலை மலையிட்டணைகட்டி
மன்னனிராவணனை மாமண்டுவெஞ்சமத்து
பொன்முடிகள்பத்தும் புரளச்சரந்துரந்து
தென்னுலகமேற்றுவித்த சேவகனை ஆயிரங்கண்
மன்னவன்வானமும் வானவர்த்தம்பொன்னும்லகும்

தன்னுடையதோள்வலியால் கைக்கொண்டதானவனை
பின்னோரரியுருவமாகி எரிவிழித்து
கொல்நவிலும்வெஞ்சமதுக் கொல்லாதே வல்லாளன்
மன்னும்மணிக்குஞ்சி பற்றிவரவீர்த்து
தன்னுடையதாள்மேல் கிடாத்தி அவனுடைய
பொன்னகலம்வள்ளுகிரால் போழ்ந்துபுகழ்படைத்த
மின்னிலங்கும்ஆழிப்படைத் தடக்கைவீரனை
மன்னிவ்வகலிடத்தை மாமுதுநீர்தான்விழுங்க

பின்னுமோரேனமாய் புக்குவளைமருப்பில்
கொன்னவிலுங்கூர்நுதிமேல் வைத்தெடுத்தகூத்தனை

மன்னும்வடமலையை மத்தாகமாசுணத்தால் மின்னுமிருசுடரும் விண்ணும்பிறங்கொளியும்

தன்னினுடனே சுழலமலைதிரித்து ஆங்கு
இன்னமுதம் வானவரையூட்டி அவருடைய

மன்னுந்துயர்க்கடிந்த வள்ளலை மற்றன்றியும்
தன்னுருவம் ஆருமறியாமல் தானங்கு ஓர்

மன்னுங்குறளுருவில் மாணியாய் மாவலிதன்
பொன்னியலும்வேள்விக்கண் புக்கிருந்து போர்வேந்தர்

மன்னைமனங்கொள்ள வஞ்சித்துநெஞ்சுருக்கி
என்னுடையபாதத்தால் யானளப்பமூவடிமண்
மன்னா! தருகென்று வாய்திறப்ப மற்றவனும்
என்னால்தரப்பட்டதென்றலுமே அத்துணைக்கண்

மின்னார்மணிமுடிபோய் விண்தடவ மேலெடுத்த
பொன்னார்கனைகழற்கால் ஏழுலகும்போய்க்கடந்து அங்கு

ஒன்னாவசுரர் துளங்கச்செலநீட்டி
மன்னிவ்வகலிடத்தை மாவலியைவஞ்சித்து

தன்னுலகமாக்குவித்த தாளானை தாமரைமேல்
மின்னிடையாள்நாயகனை விண்ணகருள்பொன்மலையை

பொன்னிமணிகொழிக்கும் பூங்குடந்தைப்போர் விடையை
தென்னன்குறுங்குடியுள் செம்பவளக்குன்றினை

மன்னியதண் சேறை வள்ளலை மாமலர்மேல்
அன்னம்துயிலும் அணிநீர்வயலாலி

என்னுடையவின்னமுதை எவ்வுள் பெருமலையை
கன்னிமதிள்சூழ் கணமங்கைக்கற்பகத்தை

மின்னையிருசுடரை வெள்ளறையுள்கல்லறைமேற்
பொன்னை மரதகதைப் புட்குழியெம்போரேற்றை

மன்னுமரங்கத்துஎம்மாமணியை வல்லவாழ்
பின்னைமணாளனைப் பேரில்பிறப்பிலியை

தொன்னீர்க்கடல்கிடந்த தோளாமணிச்சுடரை
என்மனத்துமாலை இடவெந்தையீசனை
மன்னுங்கடல்மல்லை மாயவனை வானவர்தம்
சென்னிமணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை

தன்னைப்பிறரறியாத் தத்துவத்தைமுத்தினை
அன்னத்தைமீனை அரியைஅருமறையை

முன்னிவ்வுலகுண்டமூர்த்தியை கோவலூர்
மன்னுமிடைகழி யெம்மாயவனை பேயலறப்

பின்னும்முலையுண்டபிள்ளையை அள்ளல்வாய்
அன்னமிரைதேர் அழுந்தூரெழுஞ்சுடரை

தெந்தில்லைச் சித்திரகூடத்துஎன் செல்வனை
மின்னிமழைதவழும் வேங்கடத்துஎம்வித்தகனை

மன்னனை மாலிருஞ்சோலைமணாளனை
கொல்நவிலும் ஆழிப்படையானை கோட்டியூர்

அன்னவுருவினரியை திருமெய்யத்து
இன்னமுதவெள்ளத்தை இந்தளூரந்தணனை

மன்னுமதிள்கச்சி வேளுக்கையாளரியை
மன்னியபாடகத்து எம்மைந்தனை வெஃகாவில்

உன்னியயோகத்துறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்டபுயகரத்தெம்மானேற்றை

என்னைமனங்கவர்ந்தஈசனை வானவர்த்தம்
முன்னவனை மூழிக்களத்துவிளக்கினை

அன்னவனை ஆதனூராண்டாளக்குமையனை
நென்னலையின்றினை நாளையை நீர்மலைமேல்

மன்னும்மறைநான்குமானானை புல்லாணித்
தென்னன்தமிழை வடமொழியை நாங்கூரில்

மன்னுமணிமாடக் கோயில்மணாளனை
நல்நீர்த்தலைச்சங்கநாண்மதியை நான்வணங்கும்

கண்ணனைக் கண்ணபுரத்தானை தென்னறையூர்
மன்னுமணிமாடக் கோயில்மணாளனை

கல்நவில்தோள்காளையைக் கண்டாங்குக்கைதொழுது என்னிலைமையெல்லாம் அறிவித்தால்எம்பெருமான்

தன்னருளுமாகமும் தாரானேல் தன்னைநான்
மின்னிடையார்சேரியிலும் வேதியர்கள்வாழ்விடத்தும்
தன்னடியார்முன்பும் தரணிமுழுதாளும்
கொல்நவிலும்வேல்வேந்தர்கூட்டத்தும்நாட்டகத்தும்
தன்னிலைமையெல்லாம் அறிவிப்பன் தான்முனநாள்
மின்னிடையாய்ச்சியர்த்தம் சேரிக்களவிங்கண்

துன்னுபடல்திறந்துபுக்கு தயிர்வெண்ணெய்
தன்வயிறார விழுங்க கொழுங்கயல்கண்

மன்னுமடவோர்கள் பற்றியோர்வான்கயிற்றால் பின்னுமுரலோடு கட்டுண்டபெற்றிமையும்
அன்னதோர்பூதமாய் ஆயர்விழவின்கண் துன்னுசகடத்தால் புக்கபெருஞ்சோற்றை

முன்னிருந்துமுற்றத்தான் துற்றியதெற்றெனவும் மன்னர்பெருஞ்சவையுள் வாழ்வேந்தர்தூதனாய்
தன்னையிகழ்ந்துரைப்பத் தான்முனநாள்சென்றதுவும்
மன்னுபறைகறங்க மங்கையர்த்தம்கண்களிப்ப

கொன்னவிலுங்கூத்தனாய்ப் பெயர்த்துங்குடமாடி
என்னிவன்? என்னப்படுகின்றஈடறவும்

தென்னிலங்கையாட்டி அரக்கர்குலப்பாவை
மன்னனிராவணன்தன் நல்தங்கை வாளெயிற்றுத்

துன்னுசுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி
பொன்னிறங்கொண்டு புலர்ந்தெழுந்தகாமத்தால்
தன்னைநயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து
மன்னியதிண்ணெனவும் வாய்த்தமலைபோலும்
தன்னிகரொன்றில்லாத தாடகையை மாமுனிக்காகத்
தென்னுலகமேற்றுவித்த திண்திறலும் மற்றிவைதான்

உன்னியுலவாவுலகறிய ஊர்வன்நான்
முன்னிமுளைத்தெழுந்து ஓங்கியொளிபரந்த

மன்னியம்பூம் பெண்ணை மடல்.




[2674.2]
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும்
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்




[2692.0]
Go to Top
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து




[2678.0]
பட்டர் அருளிச்செய்தவை
வான்திகழும் சோலைமதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்றதமிழ் மறைகளாயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.




[2675.5]
ஈச்வரமுனிகள்அருளிச்செய்தது
திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும்
மருவினியவண்பொருநலென்றும் - அருமறைகள்
அந்தாதிசெய்தானடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய்நெஞ்சே! தெளிந்து.



[2675.2]
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர்




[2709.0]
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு




[2702.0]
நான் அவனைக் கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும்




[2697.0]
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை




[2691.0]
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து




[2690.0]
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்




[2687.0]
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை




[2676.0]
Go to Top
நாதமுனிகள் அருளிச்செய்தது
பக்தாம்ருதம் விஸ்வஜநாநுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்க்மயம்
ஸஹஸ்ரஸாகோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம்த்ராவிடவேதஸாகரம்



[2675.1]
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல்



[2712.0]
Go to Top
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம்




[2689.0]
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு




[2686.0]
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்




[2680.0]
Go to Top
அனந்தாழ்வான் அருளிச்செய்த்து
ஏய்ந்த பெருங்கீர்த்தி யிராமானுசமுனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராதவுள்ளம் பெற.




[2675.4]
நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்,
முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?, - சூழ்கடலுள்,
பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்,
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,.0
2742.0



[0.5]
Go to Top
நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்,
முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?, - சூழ்கடலுள்,
பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்,
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,.0
2742.0



[948.5]
Go to Top
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் யான் முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை
சிந்தாமல் கொள்மின் நீர் தேர்ந்து



[2382.0]
தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும்
பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான்பால்



[2383.0]
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ஞாலத்து
ஒரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்த ஆறு?



[2384.0]
Go to Top
ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறு உடையன் என்பதுவும் கொள்கைத்தே? வேறு ஒருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப் பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து



[2385.0]
தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே உகத்தில்
ஒருநான்று நீ உயர்த்தி உள்வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி



[2386.0]
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே ஆதலால் இன்று



[2387.0]
இன்று ஆக நாளையே ஆக இனிச் சிறிது
நின்று ஆக நின் அருள் என்பாலதே நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே
நீ என்னை அன்றி இலை



[2388.0]
Go to Top
இலை துணை மற்று என் நெஞ்சே! ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா குலை கொண்ட
ஈர் ஐந்தலையான் இலங்கையை ஈடு அழித்த
கூர் அம்பன் அல்லால் குறை



[2389.0]
குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு



[2390.0]
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும்
பூங் கார் அரவு அணையான் பொன் மேனி யாம் காண
வல்லமே அல்லமே? மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து



[2391.0]
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் சூழ்த்த
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து



[2392.0]
Go to Top
மதித்தாய் போய் நான்கில் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய்
மடுக் கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு



[2393.0]
வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்திக்
கூடு ஆக்கி நின்று உண்டு கொன்று உழல்வீர் வீடு ஆக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதற்பொருள் தான் விண்ணவர்க்கு
நற்பொருள் தான் நாராயணன



[2394.0]
நாராயணன் என்னை ஆளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமயர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர



[2395.0]
பல தேவர் ஏத்த படி கடந்தான் பாதம்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை



[2396.0]
Go to Top
நிலைமன்னும் என் நெஞ்சம் அந்நான்று தேவர்
தலைமன்னர் தாமே மாற்றாக பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன்மாய பொழில் மறைய
தேர் ஆழியால் மறைத்தாரால்



[2397.0]
ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல்
வளர்ந்தானைத் தான் வணங்குமாறு



[2398.0]
மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு
கூறாகக் கீறிய கோளரியை வேறாக
ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தியிருப்பார் தவம்



[2399.0]
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த ஆழியாய் அன்றே? உவந்து எம்மைக்
காப்பாய் நீ காப்பதனை ஆவாய் நீ வைகுந்தம்
ஈப்பாயும் எவ் உயிர்க்கும் ந



[2400.0]
Go to Top
நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் நீயே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை



[2401.0]
இவையா பில வாய் திறந்து எரி கான்ற
இவையா எரிவட்டக் கண்கள் இவையா
எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு



[2402.0]
அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் குழவியாய்த்
தான் ஏழ் உலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீன் ஆய் உயிர் அளிக்கும் வித்து



[2403.0]
வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த
பத்தி உழவன் பழம் புனத்து? மொய்த்து எழுந்த
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து



[2404.0]
Go to Top
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய்
சினப் போர்ச் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை



[2405.0]
வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஒன்று உண்டே? வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று



[2406.0]
மற்றுத் தொழுவார் ஒருவரையும் யான் இன்மை
கற்றைச் சடையான் கரி கண்டாய் எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா! யான் உன்னைக்
கண்டுகொளகிற்குமாறு



[2407.0]
மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள்! நீறாடி
தான் காண மாட்டாத தார் அகலச் சேவடியை
யான் காண வல்லேற்கு இது?



[2408.0]
Go to Top
இது இலங்கை ஈடு அழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்க தண் தார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு



[2409.0]
உகப்பு உருவன் தானே ஒளி உருவன் தானே
மகப்பு உருவன் தானே மதிக்கில் மிகப் புருவம்
ஒன்றுக்கு ஒன்று ஓசனையான் வீழ ஒரு கணையால்
அன்றிக்கொண்டு எய்தான் அவன்



[2410.0]
அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது
உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவு அணையின்மேல்?



[2411.0]
மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை



[2412.0]
Go to Top
கதைப் பொருள் தான் கண்ணன் திருவயிற்றின் உள்ள
உதைப்பளவு போதுபோக்கு இன்றி வதைப்பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி



[2413.0]
அடிச் சகடம் சாடி அரவு ஆட்டி யானை
பிடித்து ஒசித்து பேய் முலை நஞ்சு உண்டு வடிப் பவள
வாய்ப் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து
கோ பின்னும் ஆனான் குறிப்பு



[2414.0]
குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்?



[2415.0]
தாளால் உலகம் அளந்த அசைவேகொல்?
வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீள் ஓதம்
வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்து அணை



[2416.0]
Go to Top
நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள்
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான்



[2417.0]
வான் உலவு தீவளி மா கடல் மா பொருப்பு
தான் உலவு வெம் கதிரும் தண் மதியும் மேல் நிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு



[2418.0]
அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் உகைக்குமேல்
எத் தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு



[2419.0]
அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக்கூடல் கூட மழைப் பேர்
அருவி மணி வரன்றி வந்து இழிய யானை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு



[2420.0]
Go to Top
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடு ஆக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண்



[2421.0]
காணல் உறுகின்றேன் கல் அருவி முத்து உதிர
ஓண விழவில் ஒலி அதிர பேணி
வரு வேங்கடவா என் உள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று



[2422.0]
சென்று வணங்குமினோ சேண் உயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் என்றும்
கடிக் கமல நான்முகனும் கண்மூன்றத்தானும்
அடிக் கமலம் இட்டு ஏத்தும் அங்கு



[2423.0]
மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரைமேலானும்
குடை ஏற தாம் குவித்துக் கொண்டு



[2424.0]
Go to Top
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப்
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கடமலைக்கே
போம் குமரருள்ளீர்! புரிந்து



[2425.0]
புரிந்து மலர் இட்டுப் புண்டரிகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப தெரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு



[2426.0]
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்து ஆடுதுமேல் நன்று



[2427.0]
நன்மணி வண்ணன் ஊர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் பன்மணி நீ
ரோடு பொருது உருளும் கானமும் வானரமும்
வேடும் உடை வேங்கடம்



[2428.0]
Go to Top
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் வேங்கடமே
தானவரை வீழத் தன் ஆழிப் படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை



[2429.0]
மலை ஆமைமேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலை ஆமை தான் ஒரு கை பற்றி அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று



[2430.0]
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாராவகை அறிந்தேன் ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு



[2431.0]
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே? எம் பெருமான்
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புனக் காயா
வண்ணனே உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண் எல்லாம் உண்டோ விலை?



[2432.0]
Go to Top
விலைக்கு ஆட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்கு ஆட்பலி திரிவர் தக்கோர் முலைக்கால்
விடம் உண்ட வேந்தனையே வேறா ஏத்தாதார்
கடம் உண்டார் கல்லாதவர்



[2433.0]
கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன்
அல்லால் ஒரு தெய்வம் யான் இலேன் பொல்லாத
தேவரை தேவர் அல்லாரை திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு



[2434.0]
தேவராய் நிற்கும் அத் தேவும் அத் தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் யாவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை



[2435.0]
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
யார் ஓத வல்லார் அவர்?



[2436.0]
Go to Top
அவர் இவர் என்று இல்லை அனங்கவேள் தாதைக்கு
எவரும் எதிர் இல்லை கண்டீர் உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு



[2437.0]
ஒருங்கு இருந்த நல் வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் மருங்கு இருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என் நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என்?



[2438.0]
என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன் அஞ்ச முன் ஒருநாள் மண் அளந்தான் என் நெஞ்சம்
மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு



[2439.0]
அன்பு ஆவாய் ஆர் அமுதம் ஆவாய் அடியேனுக்கு
இன்பு ஆவாய் எல்லாமும் நீ ஆவாய் பொன் பாவை
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள்



[2440.0]
Go to Top
ஆள் பார்த்து உழிதருவாய் கண்டுகொள் என்றும் நின்
தாள்பார்த்து உழிதருவேன் தன்மையை கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்



[2441.0]
மனக் கேதம் சாரா மதுசூதன் தன்னைத்
தனக்கே தான் தஞ்சமாக் கொள்ளில் எனக்கே தான்
இன்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு



[2442.0]
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் திரு இருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டு உலவு தண் துழாய்த்
தார் தன்னைச் சூடித் தரித்து



[2443.0]
தரித்திருந்தேன் ஆகவே தாராகணப் போர்
விரித்து உரைத்த வெம் நாகத்து உன்னைத் தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது



[2444.0]
Go to Top
போதான இட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது



[2445.0]
சூது ஆவது என் நெஞ்சத்து எண்ணினேன் சொல் மாலை
மாது ஆய மாலவனை மாதவனை யாதானும்
வல்லவா சிந்தித்திருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்?



[2446.0]
இடம் ஆவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு திடமாக
வையேன் மதிசூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட் செய்யேன் வலம்



[2447.0]
வலம் ஆக மாட்டாமை தான் ஆக வைகல்
குலம் ஆக குற்றம் தான் ஆக நலம் ஆக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானை
சீரணனை ஏத்தும் திறம்



[2448.0]
Go to Top
திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புரம் தொழா மாந்தர் இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு



[2449.0]
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி அதுவே கண்டீர் கவிக்கு
நிறை பொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையேதான்



[2450.0]
தான் ஒருவன் ஆகி தரணி இடந்து எடுத்து
ஏன் ஒருவனாய் எயிற்றில் தாங்கியதும் யான் ஒருவன்
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்



[2451.0]
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல்



[2452.0]
Go to Top
இல்லறம் அல்லேல் துறவறம் இல் என்னும்
சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத் தவமும் நாரணனே
ஆவது ஈது அன்று என்பார் ஆர்?



[2453.0]
ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த
பேர் ஆழியான் தன் பெருமையை? கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி



[2454.0]
பதிப் பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்து அடைந்த வாள் அரவம் தன்னை மதித்து அவன் தன்
வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஒன்று ஏத்தாது என் நா



[2455.0]
நாக் கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆக
தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு



[2456.0]
Go to Top
பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தன மாயையில் பட்ட தற்பு



[2457.0]
தற்பு என்னைத் தான் அறியானேலும் தடங் கடலைக்
கல் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் என் கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான்
எவ் வினையும் மாயுமால் கண்டு



[2458.0]
கண்டு வணங்கினார்க்கு என்னாம்கொல் காமன் உடல்
கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும்
தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து?



[2459.0]
ஆய்ந்துகொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம்
மெய் குந்தம் ஆக விரும்புவரே தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து



[2460.0]
Go to Top
விரைந்து அடைமின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் பரந்து உலகம்
பாடின ஆடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு



[2461.0]
கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன் விதை ஆக
நல் தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழி ஆகிக் கலந்து



[2462.0]
கலந்தான் என் உள்ளத்து காம வேள் தாதை
நலம் தானும் ஈது ஒப்பது உண்டே? அலர்ந்தலர்கள்
இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்றிவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து



[2463.0]
வேந்தர் ஆய் விண்ணவர் ஆய் விண் ஆகி தண்ணளி ஆய்
மாந்தர் ஆய் மாது ஆய் மற்று எல்லாம் ஆய் சார்ந்தவர்க்குத்
தன் ஆற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்



[2464.0]
Go to Top
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன்;அவன் எனக்கு நேரான் அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழக் காதல் பூண்டேன் தொழில்



[2465.0]
தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்று அதுவே போதும் கழி சினத்த
வல்லாளன் வானரக் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன்



[2466.0]
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன் ஒப்பான் தான் ஆய் உளன் காண் தமியேற்கும்
என் ஒப்பார்க்கு ஈசன் இமை



[2467.0]
இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்து உண்டு ஆர் காப்பார் சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்?



[2468.0]
Go to Top
உயிர் கொண்டு உடல் ஒழிய ஓதும்போது ஓடி
அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது



[2469.0]
பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம்
வழுவாவகை நினைந்து வைகல் தொழுவாரைக்
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு



[2470.0]
வீற்றிருந்து விண் ஆள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி
வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே
தாழ்வாய் இருப்பார் தமர்



[2471.0]
தமர் ஆவார் யாவர்க்கும் தாமரைமேலாற்கும்
அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று



[2472.0]
Go to Top
என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கரு இருந்த நாள் முதலாக் காப்பு



[2473.0]
காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ஆக்கை
கொடுத்து அளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்



[2474.0]
மெய் தெளிந்தார் என் செய்யார்? வேறு ஆனார் நீறு ஆக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து பை தெளிந்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறி ஆகும் என்று



[2475.0]
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன்
கடன் நாடும் மண் நாடும் கைவிட்டு மேலை
இடம் நாடு காண இனி



[2476.0]
Go to Top
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம் பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்



[2477.0]
ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்
ஒருமுறை அயனை ஈன்றனை ஒரு முறை
இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள்
இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில்
அட்டனை மூவடி நானிலம் வேண்டி
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு
மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி
ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை
நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை
ஏறி நால் வாய் மும் மதத்து இரு செவி
ஒரு தனி வேழத்து அரந்தையை ஒருநாள்
இரு நீர் மடுவுள் தீர்த்தனை முத் தீ
நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன்
அகத்தினுள் செறித்து நான்கு உடன் அடக்கி
முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர்
அறியும் தன்மையை முக் கண் நால் தோள்
ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன்
அறிவு அரும் தன்மைப் பெருமையுள் நின்றனை
ஏழ் உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய
அறு சுவைப் பயனும் ஆயினை சுடர்விடும்
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர
நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து
மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
ஏழ் விடை அடங்கச் செற்றனை
அறு வகைச் சமயமும் அறிவு அரு நிலையினை
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறம் முதல் நான்கு அவை ஆய்
மூர்த்தி மூன்று ஆய் இரு வகைப் பயன் ஆய்
ஒன்று ஆய் விரிந்து நின்றனை குன்றா
மது மலர்ச் சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த
கற்போர் புரிசைக் கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
பரம நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகல மாற்றோ வினையே



[2672.0]
Go to Top
நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்,
முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?, - சூழ்கடலுள்,
பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்,
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,.0
2742.0



[2672.9]
Go to Top
மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்,
சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,
மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல்,
மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச




[2713.0]
துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்,
என்னும் விதானத்தைன் கீழால், - இருசுடரை
மின்னும் விளக்காக ஏற்றி, மறிகடலும்
பன்னு திரைக்கவரி வீச, - நிலமங்கை




[2714.0]
தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல்,
மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன்,
என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, - மழைக்கூந்தல்
தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்




[2715.0]
என்னும் இவையே முலையா வடிவமைந்த,
அன்ன நடைய அணங்கே, - அடியிணையைத்
தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட




[2716.0]
Go to Top
பின்னை,தன் னாபி வலயத்துப் பேரொளிசேர்,
மன்னிய தாமரை மாமலர்ப்பூத்து, அம்மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள், - அம்மறைதான்




[2717.0]
மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில்,
நன்னெறிமேம் பட்டன நான்கன்றே, - நான்கினிலும்
பின்னையது பின்னைப் பெயர்த்தரு மென்பது,ஓர்
தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்




[2718.0]
என்னும் இவையே _கர்ந்துடலம் தாம்வருந்தி,
துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், - வெஞ்சுடரோன்
மன்னும் அழல்_கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும்,
பெரிய திருமடல்
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து




[2719.0]
தொன்னெறிக்கட் சென்றார் எனப்படும் சொல்லல்லால்,
இன்னதோர் காலத் தினையா ரிதுபெற்றார்,
என்னவும் கேட்டறிவ தில்லை - உளதென்னில்
மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்,




[2720.0]
Go to Top
அன்னதோர் இல்லியி னூடுபோய், - வீடென்னும்
தொன்னெறிக்கட் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே,
அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,ஆங்
கன்னவரைக் கற்பிப்போம் யாமே?, - அதுநிற்க




[2721.0]
முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற,
அன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன்,
பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப, - பொங்கொளிசேர்
கொன்னவிலும் கோளரிமாத் தாஞ்சுமந்த கோலம்சேர்




[2722.0]
மன்னிய சிங்கா சனத்தின்மேல், - வாணொடுங்கண்
கன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து,ஆங்
கின்னளம்பூந் தென்றல் இயங்க, - மருங்கிருந்த
மின்னனைய _ண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்




[2723.0]
முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,
அன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர்,
பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்,
மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை




[2724.0]
Go to Top
இன்னைசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்,
மன்னிய மாமயில்போல் கூந்தல், - மழைத்தடங்கண்
மின்னிடையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து,
மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்




[2725.0]
மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த,
மன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள்,
அன்ன நடைய அரம்பயர்த்தம் வகைவளர்த்த
இன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று, - இருவிசும்பில்




[2726.0]
மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய்,
மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்,
மன்னும் மளிவிளக்கை மாட்டி, - மழைக்கண்ணார்
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்




[2727.0]
துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப,
அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச்,
சின்ன நறுந்தாது சூடி, - ஓர் மந்தாரம்
துன்னும் நறுமலரால் தோள்கொட்டி, கற்பகத்தின்




[2728.0]
Go to Top
மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர
இன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல்
நன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, - தாங்கருஞ்சீர்
மின்னிடைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல்




[2729.0]
பொன்னரும் பாரம் புலம்ப, - அகங்குழைந்தாங்
கின்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார்,
அன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல்,
இன்னமுதம் மாந்தி யிருப்பர், - இதுவன்றே




[2730.0]
அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால், - காமத்தின்
மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்




[2731.0]
மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்,
தென்னுறையில் கேட்டறிவ துண்டு, - அதனை யாம்தெளியோம்,
மன்னும் வடநெறியே வேண்டினோம்-வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின்,.0



[2732.0]
Go to Top
அன்னதோர் தன்மை அறியாதார், - ஆயன்வேய்
இன்னிசை ஓசைக் கிரங்காதார், மால்விடையின்
மன்னும் மணிபுலம்ப வாடாதார், - பெண்ணைமேல்
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு




[2733.0]
உன்னி யுடலுருகி நையாதார், - உம்பவர்வாய்த்
துன்னி மதியுகுத்த தூநிலா நீணெருப்பில்,
தம்முடலம் வேவத் தளராதார், - காமவேள்
மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய




[2734.0]
பொன்னொடு வீதி புகாதார், - தம் பூவணைமேல்
சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும்,
இன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும்,
பொன்னனையார் பின்னும் திருவுறுக-போர்வேந்தன்




[2735.0]
தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து,
பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு,
மன்னும் வளநாடு கைவிட்டு, - மாதிரங்கள்
மின்னுருவில் விண்டோர் திரிந்து வெளிப்பட்டு




[2736.0]
Go to Top
கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று,
பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா,
கொன்னவிலும் வெங்கானத் தூடு,-கொடுங்கதிரோன்
துன்னு வெயில்வறுத்த வெம்பரமேல் பஞ்சடியால்




[2737.0]
மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும்,
அன்ன நடைய அணங்கு நடந்திலளே?,
பின்னும் கருநெடுங்கண் செவ்வய்ப் பிணைநோக்கின்,
மின்னனைய _ண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்




[2738.0]
கன்னி,தன் இன்னுயிராம் காதலனைக் காணது,
தன்னுடைய முந்தோன்றல் கொண்டேகத் தாஞ்சென்று,அங்
கன்னவனை நோக்கா தழித்துரப்பி, - வாளமருள்
கன்ன்வில்தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்




[2739.0]
பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?, பூங்கங்கை
முன்னம் புனல்பரக்கும் நன்னாடன், மின்னாடும்
கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை,
தன்னிகரொன் றில்லாத வென்றித் தனஞ்சயனை,



[2740.0]
Go to Top
பன்னாக ராயன் மடப்பாவை, - பாவைதன்
மன்னிய நாணச்சம் மடமென் றிவையகல,
தன்னுடைய கொங்கை முகநெரிய, - தான் அவன்றன்
பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,தனது




[2741.0]
நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்,
முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?, - சூழ்கடலுள்,
பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்,
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,.0



[2742.0]
தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும்,
கன்னியரை யில்லாத காட்சியாள், - தன்னுடைய
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய்,
மன்னும் மணிவரைத்தோள் மாயவன், - பாவியேன்




[2743.0]
என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்,
மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்,
கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ,
மன்னிய பேரின்பம் எய்தினாள், - மற்றிவைதான்




[2744.0]
Go to Top
என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன்,
மன்னும் மலையரயன் பொற்பாவை, - வாணிலா
மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,
அன்ன நடைய அணங்கு _டங்கிடைசேர்




[2745.0]
பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல,
தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,ஆங்
கன்ன அருந்தவத்தி னூடுபோய், - ஆயிரந்தோள்
மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள




[2746.0]
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,
தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும்,
கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,
அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?




[2747.0]
பன்னி யுரைக்குங்கால் பாரதமாம்-பாவியேற்கு
என்னுறுநோய் யானுரைப்பக் கேண்மின், இரும்பொழில்சூழ்
மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்,
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு




[2748.0]
Go to Top
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும்
மன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும்,
பன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின்
பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்




[2749.0]
மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும்,
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்,
துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப,
மன்னும் மரகதக் குன்றின் மருங்கே, - ஓர்



[2750.0]
இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்,
அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே,
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்,
முன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய்




[2751.0]
அன்ன திருவுருவம் நின்ற தறியாதே,
என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்,
பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு
மன்னும் மறிகடலும் ஆர்க்கும், - மதியுகுத்த




[2752.0]
Go to Top
இன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும்.
தன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ, -
தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து,
மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்




[2753.0]
இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே,
முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து,
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,
என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன்




[2754.0]
கன்னவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய,
கொன்னவிலும் பூங்கணைகள் கோத்தெளப் பொதவணைந்து,
தன்னுடைய தோள்கழிய வாங்கி, - தமியேன்மேல்
என்னுடைய நெசே இலக்காக எய்கின்றான்




[2755.0]
பின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையே, - பேதையேன்
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்,
நன்னறு வசமற் றாரானும் எய்தாமே,
மன்னும் வறுநிலத்து வாளாங் குகுத்ததுபோல்




[2756.0]
Go to Top
என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்,
மன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப்
பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி




[2757.0]
முன்னிருந்து மூக்கின்று,மூவாமைக் காப்பதோர்
மன்னும் மருந்தறிவி ரில்லையே? - மல்விடையின்
துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால்
கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு, மாலைவாய்




[2758.0]
தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்,
இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே,
கொன்னவிலு மெகில் கொடிதாய் நொடிதாகும்,
என்னிதனைக் காக்குமா சொல்லீர்?, இதுவிளைத்த




[2759.0]
மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் - மாமதிகோள்
முன்னம் விடுத்த முகில்வண்ணன் - காயாவின்
சின்ன நறும்பூந் திகழ்வண்ணன் - வண்ணம்போல்
அன்ன கடலை மலையிட் டணைகட்டி




[2760.0]
Go to Top
மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து,
பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து
தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை, - ஆயிரங்கண்
மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னும்லகும்




[2761.0]
தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவை
பின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து,
கொன்னவிலும் வெஞ்சமதுக் கொல்லாதே, - வல்லாளன்
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து




[2762.0]
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி, - அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை,
மின்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க




[2763.0]
பின்னுமோர் ஏனமாய் புக்கு வளைமருப்பில்,
கொன்னவிலும் கூர்_திமேல் வைத்தெடுத்த கூத்தனை,
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும்




[2764.0]
Go to Top


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 06 Aug 2026 02:15:30 +0000  
   

send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group