சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean   முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் வண்%
வண்     வண்டினம்     வண்டு     வண்டுகளோ     வண்ண     வண்ணக்     வண்ணப்     வண்ணம்     வண்ணம்-திரிவும்     வண்மையினாலும்    
Number of search results : 28
13.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன்திருவவதாரம்

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே
35.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 13   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

வண்டு அமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே
      காரிகையீர் வந்து காணீரே
140.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி
      மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத
      நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே திரியை
      எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய
      கனகக் கடிப்பும் இவையாம்
212.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வருபுனற் காவிரித் தென்னரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணையடி என்தலை மேலனவே
237.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்

வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானைக் கான் -அதரிடைக் கன்றின்பின்
எண்ணற்கு அரியானைப் போக்கினேன் எல்லே பாவமே
362.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

வண்ண நல் மணியும் மரகதமும்
      அழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக்கோட்டியூர்த் திரு
      மாலவன் திருநாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப்
      போதும் எண்ணகிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக்
      கவளம் உந்துகின்றார்களே
440.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

வண்ண மால் வரையே குடையாக
      மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே
      காரணா களிறு அட்ட பிரானே
எண்ணுவார் இடரைக் களைவானே
      ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள்தொறும் ஏத்தும்
      நன்மையே அருள்செய் எம்பிரானே
623.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்

வண்ணம்-திரிவும் மனம்-குழைவும்
      மானம் இலாமையும் வாய்வெளுப்பும்
உண்ண லுறாமையும் உள்மெலிவும்
      ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணந் துழாய் என்னும் மாலை கொண்டு
      சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப்
பண் அழியப் பலதேவன் வென்ற
      பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின்
822.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 71   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி ஓடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே
885.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 14   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

வண்டினம் முரலும் சோலை
      மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை
      குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை
      அணி திருவரங்கம் என்னா
மிண்டர்பாய்ந்து உண்ணும்சோற்றை
      விலக்கி நாய்க்கு இடுமின் நீரே
977.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி

வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடு மாலைக்
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி ஆடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே
1022.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 1

வண் கையான் அவுணர்க்கு நாயகன்
      வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம்
      ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான்
      இருஞ்சோலை மேவிய எம் பிரான்
திண் கை மா துயர் தீர்த்தவன் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே
1227.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் மணிமாடக்கோயில்

வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்
      மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன்
      கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களி யானை மீதே
      கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்
      விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே
1437.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பேர் நகர்

வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு-அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கைத்
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டு இவை பாடி ஆடக் கூடுவர்-நீள் விசும்பே
1448.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:1

வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு
பண்டை நம் வினை கெட என்று அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு
அண்டமொடு அகல்-இடம் அளந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே
1557.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:8

வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டு ஆய் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்று ஆட
உண்டே விசும்பு உம்-தமக்கு இல்லை துயரே
1657.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 1

வண்டு அமரும் வனமாலை மணி முடிமேல் மணம் நாறும்
      என்கின்றாளால்
உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன்
      என்கின்றாளால்
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில்? யாம் என்றே
      பயில்கின்றாளால்-
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ?
1675.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 3

வண்டு அமரும் மலர்ப் புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும்
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே
1688.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 5

வண்டு அமரும் சோலை வயல் ஆலி நல் நாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ணபுரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்து ஊதாய்-கோல் தும்பீ
1738.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 10

வண்டு ஆர் பூ மா மலர்-மங்கை மண நோக்கம்
உண்டானே!-உன்னை உகந்து-உகந்து உன்-தனக்கே
தொண்டு ஆனேற்கு என் செய்கின்றாய்? சொல்லு-நால்வேதம்
கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே
1827.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 1

வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை
      மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடர் ஒளி நெடு வேல்
      சூழ் வயல் ஆலி நல் நாடன்
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன்
      கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
      ஆள்வர்-இக் குரை கடல் உலகே
1996.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாழல்

வண்ணக் கருங் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் காண் ஏடீ-
கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே
2532.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 55   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டு கள் வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே?
2540.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 63   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் குளிர் விழிய
தண் மென் கமலத் தடம் போல் பொலிந்தன தாம் இவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனொடு இக் காலம் இருக்கின்றவே
2863.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 13   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

வண்மையினாலும் தன் மா தகவாலும் மதி புரையும்
தண்மையினாலும் இத் தாரணியோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை உன்னும்
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே   
3087.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பன்னிரு நாமப் பாட்டு

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே
3552.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திர

வண்ணம் மருள் கொள் அணி மேக
      வண்ணா மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும்
      அமுதே இமையோர் அதிபதியே
தெள் நல் அருவி மணி பொன் முத்து
      அலைக்கும் திருவேங்கடத்தானே
அண்ணலே உன் அடி சேர
      அடியேற்கு ஆஆ என்னாயே
3868.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 92   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான தி

வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:45 +0000