சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean   முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் மா%
மா     மாகம்     மாசு     மாசூணாச்     மாட     மாடே     மாட்டாதே     மாட்டீர்     மாணிக்     மாணிக்கக்     மாணிக்கம்     மாண்     மாண்பு     மாதர்     மாதலி     மாதவன்     மாதவன்பால்     மாத்     மான     மானம்     மானிட     மானை     மான்     மாமிமார்     மாய     மாயக்     மாயச்     மாயனை     மாயன்     மாயப்     மாயம்     மாயவனை     மாயவன்     மாயா     மாயோன்     மாயோம்     மாய்த்தல்     மாய்ந்து     மாரனார்     மாரி     மார்கழித்     மார்வில்     மாறி     மாறு     மாற்றங்கள்     மாற்றம்     மாற்றரசர்     மாற்றுத்தாய்     மாலாய்ப்     மாலிருஞ்சோலை     மாலுக்கு     மாலும்     மாலே     மாலை     மாலைப்     மாலையும்     மால்     மால்பால்     மாவலி     மாவினை    
Number of search results : 104
Pages:    1    2  Next
44.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாலப் பருவம்

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
      வையம் அளந்தானே தாலேலோ
75.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
சப்பாணிப் பருவம்

மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னாற் செய்த ஆய்பொன் உடை மணி
பேணி பவளவாய் முத்துஇலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி
      கருங்குழற் குட்டனே சப்பாணி
219.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஒரடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
      தரணி அளந்தானால் இன்று முற்றும்
306.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி

மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைப் தண் புதுவைப் பட்டன் சொன்ன
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணிவண்ணனுக்கு ஆளரே
310.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
      சீதை மணாளனைப் பாடிப் பற
315.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
      ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற
322.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்

மான் அமரும் மென்நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கான் அமரும் கல்-அதர் போய்க் காடு உறைந்த காலத்துத்
தேன் அமரும் பொழிற் சாரல் சித்திரகூடத்து இருப்பப்
பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும் ஓர் அடையாளம்
352.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண் குறிஞ்சிப்
பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ் சோலையதே
359.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

மாலிருஞ்சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்திதன்னை நால் வேதக்-கடல் அமுதை
மேல் இருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே
384.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலின் நாமம் இடுதல்

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேர் இட்டால் மறுமைக்கு இல்லை
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
402.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (1)

மா தவத்தோன் புத்திரன் போய்
      மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா
      உருவுருவே கொடுத்தான் ஊர்
தோதவத்தித் தூய் மறையோர்
      துறைபடியத் துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும்
      புனல் அரங்கம் என்பதுவே
432.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்

மாயவனை மதுசூதனனை
      மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை
      அரங்கத்து அரவணைப் பள்ளியானை
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன்
      விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தினர் ஆகி வல்லார்
      தூ மணிவண்ணனுக்கு ஆளர் தாமே
447.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பண்டன்று பட்டினம் காப்பே

மாணிக் குறள் உரு ஆய
      மாயனை என் மனத்துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத
      வைத்துக் கொண்டேன் பிறிது இன்றி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர்
      வலி வன் குறும்பர்கள் உள்ளீர்
பாணிக்க வேண்டா நடமின்
      பண்டு அன்று பட்டினம் காப்பே
474.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   திருப்பாவை  

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
  நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
  கூர் வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
      கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
  பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய்
478.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   திருப்பாவை  

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
      தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்
      தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
  வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
      தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்
496.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 23   ஆண்டாள்   திருப்பாவை  

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
      சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
      மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
      கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
      காரியம் ஆராய்ந்து அருள்-ஏலோர் எம்பாவாய்
499.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 26   ஆண்டாள்   திருப்பாவை  

மாலே மணிவண்ணா மார்கழி நீர் ஆடுவான்
      மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
      பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
      சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
      ஆலின் இலையாய் அருள்-ஏலோர் எம்பாவாய்
511.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
தைத்திங்களில் காமனை வழிபடல்

மாசு உடை உடம்பொடு தலை உலறி
      வாய்ப்புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு
தேசு உடைத் திறல் உடைக் காமதேவா
      நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்
      பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள்
      என்னும் இப் பேறு எனக்கு அருளு கண்டாய்
531.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

மாமிமார் மக்களே அல்லோம்
      மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத்
      தொல்லை இராத் துயில்வானே
சேமமேல் அன்று இது சால
      சிக்கென நாம் இது சொன்னோம்
கோமள ஆயர் கொழுந்தே
      குருந்திடைக் கூறை பணியாய்
538.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கூடல் இழைத்தல்

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மத யானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே
547.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
குயிற் பத்து

மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன்
      இராவணன் மேல் சர-மாரி
தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த
      தலைவன் வர எங்கும் காணேன்
போது அலர் காவிற் புதுமணம் நாறப்
      பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என்
      கருமாணிக்கம் வரக் கூவாய்
578.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
மேகவிடு தூது

மா முத்தநிதி சொரியும்
      மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட
      தாளாளன் வார்த்தை என்னே?
காமத்தீ உள்புகுந்து
      கதுவப்பட்டு இடைக் கங்குல்
ஏமத்து ஓர் தென்றலுக்கு
      இங்கு இலக்காய் நான் இருப்பேனே?         
639.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை

மாலாய்ப் பிறந்த நம்பியை
      மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
      இங்கே போதக் கண்டீரே?
மேலால் பரந்த வெயில்காப்பான்
      வினதை-சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே
641.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை

மாதவன் என் மணியினை
      வலையிற் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத் தாரா
      ஈசன்தன்னைக் கண்டீரே?
பீதக-ஆடை உடை தாழ
      பெருங் கார்மேகக் கன்றே போல்
வீதி ஆர வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே
650.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
      வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை
      அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப்
பாவினை அவ் வடமொழியை பற்று-அற்றார்கள்
      பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்
      கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே
665.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கநாதனது அடியார்க்கு அடியேன்

மாலை உற்ற கடற் கிடந்தவன்
      வண்டு கிண்டு நறுந்துழாய்
மாலை உற்ற வரைப் பெருந் திரு
      மார்வனை மலர்க் கண்ணனை
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடித்
      திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு
      மாலை உற்றது என் நெஞ்சமே
670.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்

மாரனார் வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்
பாரினாரொடும் கூடுவது இல்லை யான்
ஆர-மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நரகாந்தகன் பித்தனே
867.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 116   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

மாறு செய்த வாள்-அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன்
கூறுசெய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே?
985.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி ஆச்சிரமம்

மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த
      மன்னவன் பொன் நிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா
      உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம்
      தவிர்த்தவன்-தவம்புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே
1029.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 2

மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்-
தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என்
ஆனாய்!-வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே
1044.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 3

மான் ஏய் மட நோக்கிதிறத்து எதிர் வந்த
ஆன் ஏழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே
1082.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநீர்மலை

மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு
      அணை கட்டி வரம்பு உருவ மதி சேர்
கோல மதிள் ஆய இலங்கை கெட
      படை தொட்டு ஒருகால் அமரில் அதிர
காலம் இது என்று அயன் வாளியினால்
      கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்
நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே
1151.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவயிந்திரபுரம்

மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்-தன்
      மார்பு-அகம் இரு பிளவாக்
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள்
      கொடுத்தவன் இடம்-மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை
      விசும்பு உற மணி நீழல்
சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ்
      திருவயிந்திரபுரமே
1165.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 1

மா வாயின் அங்கம் மதியாது கீறி
      மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள்
கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்
      குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்
மூவாயிரம் நான்மறையாளர் நாளும்
      முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
1278.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்
      மற்று அவர்-தம் காதலிமார் குழையும் தந்தை   
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி
      கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்-
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து
      இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே
1290.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருமணிக்கூடம்

மாத் தொழில் மடங்கச் செற்று
      மருது இற நடந்து வன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை
      செவ்வித் தோள் புணர்ந்த எந்தை-
நாத் தொழில் மறை வல்லார்கள்
      நயந்து அறம் பயந்த வண் கைத்
தீத் தொழில் பயிலும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே
1307.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்க் காவளம்பாடி

மா வளம் பெருகி மன்னும்
      மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய
      கண்ணனைக் கலியன் சொன்ன
பா வளம் பத்தும் வல்லார்
      பார்மிசை அரசர் ஆகிக்
கோ இள மன்னர் தாழக்
      குடை நிழல் பொலிவர்-தாமே
1334.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிந்தளூர்

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மைப் பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே   
காட்டீர் ஆனீர் நும்-தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன நாங்கள் உய்யோமே?
1372.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளறை

மான வேல் ஒண் கண் மடவரல் மண்-மகள்
      அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவ
      னே!-எனக்கு அருள்புரியே-
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண்
      முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் திரு
      வெள்ளறை நின்றானே
1390.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 2

மான் ஆய மென் நோக்கி வாள் நெடுங் கண்
      நீர் மல்கும் வளையும் சோரும்
தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்
      திறம் பேசி உறங்காள் காண்மின்-
கான்-ஆயன் கடி மனையில் தயிர் உண்டு
      நெய் பருக நந்தன் பெற்ற
ஆன்-ஆயன் என் மகளைச் செய்தனகள்
      அம்மனைமீர் அறிகிலேனே
1411.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 4

மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக
      மாசுணம் அதனொடும் அளவி
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற
      படு திரை விசும்பிடைப் படர
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும்
      தேவரும் தாம் உடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்-
      அரங்க மா நகர் அமர்ந்தானே
1422.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 5

மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்
      மலர் அடி கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம்
      துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே
      போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும
ஆக வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன்
      -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
1427.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 5

மாட மாளிகை சூழ் திருமங்கை
      -மன்னன் ஒன்னலர்-தங்களை வெல்லும்
ஆடல்மா வலவன் கலிகன்றி
      அணி பொழில் திருவரங்கத்து அம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை
      எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்து-இவை பாடுமின் தொண்டீர்
      பாட நும்மிடைப் பாவம் நில்லாவே
1460.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:2

மான் ஏய் நோக்கியர்-தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊன் ஏய் ஆக்கை-தன்னை உதவாமை உணர்ந்து உணர்ந்து-
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே!-நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே
1470.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:3

மான் ஏய் நோக்கு நல்லார் மதிபோல் முகத்து உலவும்
ஊன் ஏய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்-
கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திருவிண்ணகரானே
1518.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:5

மான் கொண்ட தோல் மார்வின் மாணி ஆய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே
1594.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 1

மாலைப் புகுந்து மலர்-அணைமேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர்போலும்-
வேலைக் கடல்போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே
1658.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 2

மா வளரும் மென் நோக்கி மாதராள் மாயவனைக்
      கண்டாள் என்று
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானைக்
      கலியன் சொன்ன
பா வளரும் தமிழ்-மாலை பன்னிய நூல் இவை ஐந்தும்
      ஐந்தும் வல்லார்
பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவர் ஆய்ப்
      புகழ் தக்கோரே
1684.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 4

மார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடிமேல்
தாரில் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ
1690.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 5

மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன்
      வரை புரை திருமார்வில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்
      தாழ்ந்தது ஓர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது
      ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன
      செய்வது ஒன்று அறியேனே
1705.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 6

மால் ஆய் மனமே அருந் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் கத மா கழுதையும்
மால் ஆர் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே
1745.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 10

மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன்
பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான்-கண்ணபுரத்து உறை அம்மானே
1874.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
குழமணிதூரம்

மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர்
சீற்றம் நும்மேல் தீர வேண்டின் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண ஆடீர்-குழமணிதூரமே
1908.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்

மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம்
      அதனால் பிறர் மக்கள்-தம்மை
ஊனம் உடையன செய்யப் பெறாய் என்று
      இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்
      நங்கைகாள் நான் என் செய்கேன்?
தானும் ஓர் கன்னியும் கீழை அகத்துத்
      தயிர் கடைகின்றான் போலும்
1959.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்

மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம்
மாலின் அம் துழாய் வந்து என் உள்புக
கோல வாடையும் கொண்டு வந்தது ஓர்
ஆலி வந்ததால்-அரிது காவலே
1992.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாழல்

மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்தான் காண் ஏடீ!-
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த பொன் அடிக்கள்
வானவர்-தம் சென்னி மலர் கண்டாய் சாழலே
2022.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் ப

மாற்றம் உள ஆகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்கொல் என்று இன்னம்-
ஆற்றங்கரை வாழ் மரம்போல்-அஞ்சுகின்றேன்
நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ       
2047.0   திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்   பாடல் # 16   திருமங்கை ஆழ்வார்   திருக்குறுந் தாண்டகம்  
திருக்குறுந் தாண்டகம்

மாய மான் மாயச் செற்று
      மருது இற நடந்து வையம்
தாய் அமா பரவை பொங்கத்
      தட வரை திரித்து வானோர்க்கு
ஈயும் மால் எம்பிரானார்க்கு
      என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலைகொண்டு
      சூட்டுவன் தொண்டனேனே
2100.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 19   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

மாலும் கருங் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு
ஆலின் இலைத் துயின்ற ஆழியான் கோலக்
கரு மேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப்பெற்று?
2228.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 47   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

மாலை அரி உருவன் பாதமலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து
2281.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 100   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே மேலால்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே! என் தன்
அளவு அன்றால் யானுடைய அன்பு
2295.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 14   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

மால்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு
நூல்பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து
2399.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 18   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு
கூறாகக் கீறிய கோளரியை வேறாக
ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தியிருப்பார் தவம்      
2408.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 27   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள்! நீறாடி
தான் காண மாட்டாத தார் அகலச் சேவடியை
யான் காண வல்லேற்கு இது?  
2487.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக்கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்றிலீர் உறையீர் நுமது
வாயோ? அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ? அடும் தொண்டையோ? அறையோ இது அறிவு அரிதே
2562.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 85   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப்பொன்னே அடியேன் அடி ஆவி அடைக்கலமே
2582.0   திருவாசிரியம் -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாசிரியம்  
திருவாசிரியம்

மா முதல் அடிப் போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து
ஒண் சுடர் அடிப் போது ஒன்று விண் செலீஇ
நான்முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப
வானவர் முறைமுறை வழிபட நெறீஇ
தாமரைக் காடு மலர்க் கண்ணொடு
கனி வாய் உடையதும் ஆய் இரு நாயிறு
ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக் காவு பற்பல அன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே?     
2636.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 52   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

மாண் பாவித்து அஞ்ஞான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்து உண்டானது ஓர் உருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது
உண்ண வாய் தான் உறுமோ ஒன்று?
2642.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 58   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன் மேலால்
பிறப்பு இன்மை பெற்று அடிக்கீழ்க் குற்றேவல் அன்று
மறப்பு இன்மை யான் வேண்டும் மாடு
2643.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 59   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

மாடே வரப்பெறுவராம் என்றே வல்வினையார்
காடானும் ஆதானும் கைக்கொள்ளார் ஊடே போய்ப்
பேர் ஓதம் சிந்து திரைக் கண்வளரும் பேராளன்
பேர் ஓத சிந்திக்க பேர்ந்து?
2945.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்

மா யோனிகளாய் நடை கற்ற
      வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று
      நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும்
      திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ் உயிர்க்கும்
      தாயோன் தான் ஓர் உருவனே
2947.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்

மான் ஏய் நோக்கி மடவாளை
      மார்பில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய உண்டை வில்
      நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணிவண்ணா
      மதுசூதா நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம்
      சேருமாறு வினையேனே   
2951.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்

மாயோம் தீய அலவலைப்
      பெரு மா வஞ்சப் பேய் வீயத்
தூய குழவியாய் விடப் பால்
      அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன்
      மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்
தாயோன் தம்மான் என் அம்மான்
      அம்மா மூர்த்தியைச் சார்ந்தே     
2953.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்

மாலே மாயப் பெருமானே
      மா மாயவனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால்
      மன்னு குருகூர்ச் சடகோபன்
பால் ஏய் தமிழர் இசைகாரர்
      பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும்
      வல்லார்க்கு இல்லை பரிவதே   
2964.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராதனைக்கு எளியவன்

மாதவன்பால் சடகோபன்
தீது அவம் இன்றி உரைத்த
ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து
ஓத வல்லார் பிறவாரே     
2992.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை

மாயன் என் நெஞ்சின் உள்ளான்
      மற்றும் எவர்க்கும் அதுவே
காயமும் சீவனும் தானே
      காலும் எரியும் அவனே
சேயன் அணியன் எவர்க்கும்
      சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன்
      என்னுடைத் தோளிணையானே     
3071.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து
      உள்ளம் தேறி
ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்
      பாறிப் பாறி அசுரர் தம் பல் குழாங்கள் நீறு எழ
பாய் பறவை ஒன்று
      ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்
3077.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பன்னிரு நாமப் பாட்டு

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண் குன்றம்
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே
3124.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்

மாட்டாதே ஆகிலும் இம் மலர் தலை மா ஞாலம் நின்
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே?
3128.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்

மாசூணாச் சுடர் உடம்புஆய் மலராது குவியாது
மாசூணா ஞானம் ஆய் முழுதும் ஆய் முழுது இயன்றாய்
மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா உன பாதமலர்ச் சோதி மழுங்காதே?
3247.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இர

மாதர் மா மண்மடந்தைபொருட்டு ஏனம் ஆய்
ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர்
பாதங்கள்மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதும் மால் எய்தினள் என் தன் மடந்தையே
3256.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்

மாய்த்தல் எண்ணி வாய் முலை
      தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா
பூத் தண் மாலை கொண்டு உன்னைப்
      போதால் வணங்கேனேலும் நின்
பூத் தண் மாலை நெடு முடிக்குப்
      புனையும் கண்ணி எனது உயிரே
3285.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே
3363.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடல

மாசு அறு சோதி என் செய்ய வாய் மணிக்குன்றத்தை
ஆசு அறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம்?
ஏசு அறும் ஊரவர் கவ்வை தோழீ என் செய்யுமே?
3410.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்கு ஆய் அன்று
      மாயப்போர் பண்ணி
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்
      சிரீவரமங்கலநகர்
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கு எய்தக் கூவுவனே?      
3429.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் த

மான் ஏய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலிய
வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?
3506.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தா

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந்தாமரைக் கண்ணற்கு என் கொங்கு அலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே
3514.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தா

மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண் சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண் புனை மென்முலை தோற்றது பொற்பே
3538.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்

மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
ஊற்றின்கண் நுண் மணல் போல் உருகாநிற்பர் நீராயே
3600.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல்

மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலைபோல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே
3613.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத

மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்கு ஆய்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே?
3638.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச

மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய்
தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய் கால் ஆய்
தாய் ஆய் தந்தை ஆய் மக்கள் ஆய் மற்றும் ஆய் முற்றும் ஆய்
நீ ஆய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே
3688.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்று

மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன்
      கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலம் இட என்னைப் பண்ணி விட்டிட்டு
      ஒன்றும் உருவும் சுவடும் காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள்
      என்னுடைத் தோழியர்காள் என் செய்கேன்?
காலம் பல சென்றும் காண்பது ஆணை
      உங்களோடு எங்கள் இடை இல்லையே
3715.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகு

மாயக் கூத்தா வாமனா
      வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
      சோதிச் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
      தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம்போல் வருவானே
      ஒருநாள் காண வாராயே
3729.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால்

மாயப் பிரான் என வல்வினை மாய்ந்து அற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்
தேசத்து அமரர் திருக்கடித்தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே
3740.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வா

மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரர்க்கு அரிஏறு எனது அம்மான்
தூய சுடர்ச்சோதி தனது என் உள் வைத்தான்
தேசம் திகழும் தன் திருவருள் செய்தே
3878.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 102   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக்

மாலையும் வந்தது மாயன் வாரான்
      மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த
கோல நல் நாகுகள் உகளும் ஆலோ
      கொடியன குழல்களும் குழறும் ஆலோ
வால் ஒளி வளர் முல்லை கருமுகைகள்
      மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ
      என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே?
3880.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 104   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல்

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே
3883.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 107   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல்

மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனை
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே
3911.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொ

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம் இல் புகழினாரே  
Pages:    1    2  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:45 +0000