சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean   முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் மன்னு%
மன்னு     மன்னும்    
Number of search results : 19
351.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

மன்னு நரகன்தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்த கடல்வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்அரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே
545.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
குயிற் பத்து

மன்னு பெரும்புகழ் மாதவன் மா மணி
      வண்ணன் மணி-முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என்
      சங்கு இழக்கும் வழக்கு உண்டே?
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
      பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என்
      பவள-வாயன் வரக் கூவாய்
626.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்

மன்னு மதுரை தொடக்கமாக
      வண் துவராபதிதன் அளவும்
தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித்
      தாழ்குழலாள் துணிந்த துணிவை
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும்
      புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை
      ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே.
719.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தாலாட்டு

மன்னு புகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ
806.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 55   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

மன்னு மா மலர்க் கிழத்தி வைய மங்கை மைந்தனாய்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே?
1077.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லிக்கேணி

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்
      மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்-கோன் செய்த நல் மயிலைத்
      திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்
      காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல்-மாலை பத்து உடன் வல்லார்
      சுகம் இனிது ஆள்வர் வான்-உலகே
1410.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 4

மன்னு மா நிலனும் மலைகளும் கடலும்
      வானமும் தானவர் உலகும்
துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி
      தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி
      பிறங்கு இருள் நிறம் கெட ஒருநாள்
அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்
      -அரங்க மா நகர் அமர்ந்தானே             
1423.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 5

மன்னு நான்மறை மா முனி பெற்ற
      மைந்தனை மதியாத வெம் கூற்றம்-
தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்
      தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா
பின்னை என்றும் நின் திருவடி பிரியா
      வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும்
அன்னது ஆகும் என்று அடி-இணை அடைந்தேன்-
      அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
1527.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:5

மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை
நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார்
கல் நவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன்-உலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே
2322.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 41   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ
2718.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 11   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில்,
நன்னெறிமேம் பட்டன நான்கன்றே, - நான்கினிலும்
பின்னையது பின்னைப் பெயர்த்தரு மென்பது,ஓர்
தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்

2727.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய்,
மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்,
மன்னும் மளிவிளக்கை மாட்டி, - மழைக்கண்ணார்
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்

2729.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 11   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர
இன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல்
நன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, - தாங்கருஞ்சீர்
மின்னிடைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல்

2732.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்,
தென்னுறையில் கேட்டறிவ துண்டு, - அதனை யாம்தெளியோம்,
மன்னும் வடநெறியே வேண்டினோம்-வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின்,.0
2747.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,
தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும்,
கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,
அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?

2766.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

மன்னும் குறளுருவில் மாணியாய், - மாவலிதன்
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர்
மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,
என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்

2771.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

மன்னும் அரங்கத்தெம் மாமணியை, - வல்லவாழ்
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை,
தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை,
என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை

2772.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

மன்னும் கடன்மல்லை மாயவனை, - வானவர்தம்
சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை,
தன்னைப் பிறரறியாத் தத்துவத்தை முத்தினை,
அன்னத்தை மீனை அரியை அருமறையை,.

2778.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,
நன்னீர்த் தலைச்சங்க நான்மதியை, - நான்வணங்கும்
கண்ணனைக் கண்ண புரத்தானை, தென்னறையூர்
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை

Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:45 +0000