170.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 9
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
குழல்வாரக் காக்கையை வா எனல்
மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த முன் இவ் உலகினை முற்றும் அளந்தவன் பொன்னின் முடியினைப் பூ அணைமேல் வைத்துப் பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்
|
344.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 7
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருமாலிருஞ்சோலை-1
மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின்மேல் முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை கொல் நவில் கூர்வேற் கோன் நெடுமாறன் தென்கூடற் கோன் தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ் சோலையே
|
351.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 3
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருமாலிருஞ்சோலை-2
மன்னு நரகன்தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்த கடல்வண்ணன் மலை புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று பொன்அரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே
|
545.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
குயிற் பத்து
மன்னு பெரும்புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி-முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே? புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள-வாயன் வரக் கூவாய்
|
626.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 10
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவராபதிதன் அளவும் தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித் தாழ்குழலாள் துணிந்த துணிவை பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே.
|
687.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 11
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல
மன்னிய தண் சாரல் வட வேங்கடத்தான்தன் பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சிக் கொல் நவிலும் கூர்வேற் குலசேகரன் சொன்ன பன்னிய நூற் தமிழ்-வல்லார் பாங்காய பத்தர்களே
|
719.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
தாலாட்டு
மன்னு புகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர் கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ
|
806.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 55
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
மன்னு மா மலர்க் கிழத்தி வைய மங்கை மைந்தனாய் பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும் உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே?
|
901.0
திருமாலை -பாசுரம்
பாடல் # 30
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
திருமாலை
மனத்தில் ஓர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன்சொல் இல்லை சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா புனத்துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா எனக்கு இனிக் கதி என் சொல்லாய்? என்னை ஆளுடைய கோவே
|
1043.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவேங்கடம் 3
மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி தன் ஆக்கி தன் இன் அருள் செய்யும் தலைவன் மின் ஆர் முகில் சேர் திருவேங்கடம் மேய என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே
|
1077.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவல்லிக்கேணி
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும் தென்னன் தொண்டையர்-கோன் செய்த நல் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை கன்னி நல் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன சொல்-மாலை பத்து உடன் வல்லார் சுகம் இனிது ஆள்வர் வான்-உலகே
|
1127.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவட்டபுயகரம் தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி த
மன்னவன் தொண்டையர்-கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன் தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி-தன்னை கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே
|
1410.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 3
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவரங்கம்: 4
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவர் உலகும் துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி தொல்லை நான்மறைகளும் மறைய பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட ஒருநாள் அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான் -அரங்க மா நகர் அமர்ந்தானே
|
1423.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவரங்கம்: 5
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெம் கூற்றம்- தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய் தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் அன்னது ஆகும் என்று அடி-இணை அடைந்தேன்- அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
|
1527.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநறையூர்:5
மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார் கல் நவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார் பொன்-உலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே
|
1564.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 7
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநறையூர்:9
மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர் வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்- நல் நெஞ்ச அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ
|
1752.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கண்ணங்குடி
மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய் மூவடி நீரொடும் கொண்டு பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்- அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து அலை புனல் இலைக் குடை நீழல் செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே
|
1865.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
பொங்கத்தம் பொங்கோ
மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா அம் கயல் கண்ணினார்கள் இருப்ப தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று புனம்கொள் மென் மயிலைச் சிறைவைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ
|
1933.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 2
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு
மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர் அன்று நடுங்க ஆ-நிரை காத்த ஆண்மை கொலோ? அறியேன் நான்- நின்ற பிரானே நீள் கடல் வண்ணா நீ இவள்-தன்னை நின் கோயில் முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே
|
1972.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
தலைவி இரங்கிக் கூறல்
மன் இலங்கு பாரதத்துத் தேர் ஊர்ந்து மாவலியைப் பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து பொரு கடல் சூழ் தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு-இது காணீர்- என் இலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்தேனே
|
2124.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 43
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
மன மாசு தீரும் அரு வினையும் சாரா தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய பூந் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தம் தொழாநிற்பார் தமர்
|
2209.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 28
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனைப் பலரும் தேவாதி தேவன் எனப்படுவான் முன் ஒரு நாள் மா வாய் பிளந்த மகன்
|
2284.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 3
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள் தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்துச் செருநர் உகச் செற்று உகந்த தேங்கு ஓத வண்ணன் வரு நரகம் தீர்க்கும் மருந்து
|
2322.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 41
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ
|
2442.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 61
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
மனக் கேதம் சாரா மதுசூதன் தன்னைத் தனக்கே தான் தஞ்சமாக் கொள்ளில் எனக்கே தான் இன்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான் சென்று ஒன்றி நின்ற திரு
|
2635.0
நம்மாழ்வார் -பாசுரம்
பாடல் # 51
இயற்பா
நம்மாழ்வார்
பெரியதிருவந்தாதி
மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மைச் சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய தண் துழாயான் அடியைத் தாம் காணும் அஃது அன்றே வண் துழாம் சீரார்க்கு மாண்பு?
|
2674.2
சிறிய திருமடல் -பாசுரம்
பாடல் # 0
திருமங்கை ஆழ்வார்
சிறிய திருமடல்
இயற்பா
மன்னியபல்பொறிசேர் ஆயிரவாய்வாளரவின் சென்னிமணிக்குடுமித் தெய்வச்சுடர்நடுவுள் மன்னியநாகத்தணைமேல் ஓர்மாமலைபோல் மின்னுமணிமகரகுண்டலங்கள் வில்வீச துன்னியதாரகையின் பேரொளிசேராகாசம் என்னும்விதானத்தின்கீழால் இருசுடரை மன்னும் விளக்காகவேற்றி மறிகடலும் பன்னுதிரைக்கவரிவீச நிலமங்கை தன்னைமுனநாள் அளவிட்டதாமரைபோல் மன்னியசேவடியை வானியங்குதாரகைமீன் என்னும்மலர்ப்பிறையாலேய்ந்த மழைக்கூந்தல் தென்னனுயர்பொருப்பும் தெய்வவடமலையும் என்னுமிவையே முலையாவடிவமைந்த அன்னநடையவணங்கே அடியிணையைத் தன்னுடையவங்கைகளால் தான்தடவத்தான்கிடந்து ஓர் உன்னியயோகத்து உறக்கந்தலைக்கொண்ட பின்னை தன்னாபிவலயத்துப் பேரொளிசேர் மன்னியதாமரை மாமலர்ப்பூத்து அம்மலர்மேல் முன்னந்திசைமுகனைத் தான்படைக்க மற்றவனும் முன்னம்படைத்தனன் நான்மறைகள் அம்மறைதான் மன்னுமறம் பொருளின்பம் வீடென்று உலகில் நன்னெறிமேம்பட்டன நான்கன்றே நான்கினிலும் பின்னையது பின்னைப்பெயர்த்தருமென்பது ஓர் தொன்னெறியைவேண்டுவார் வீழ்கனியுமூழிலையும் என்னுமிவையே நுகர்ந்து உடலம்தாம்வருந்தி துன்னுமிலைக்குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் மன்னுமழல் நுகர்ந்தும் வண்தடத்தினுட் கிடந்தும் இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம்விட்டெழுந்து தொன்னெறிக்கட்சென்றா ரெனப்படுஞ்சொல்லல்லால் இன்னதோர்காலத்து இனையாரிது பெற்றார் என்னவுங் கேட்டறிவதில்லை உளதென்னில் மன்னுங்கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்னதோரில்லியினூடுபோய் வீடென்னும் தொன்னெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே அன்னதேபேசும் அறிவில் சிறுமனத்து ஆங் கன்னவரைக் கற்பிப்போம்யாமே அதுநிற்க முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற அன்னவர்த்தாம்காண்டீர்கள் ஆயிரக்கண்வானவர்கோன் பொன்னகரம்புக்கமரர் போற்றிசைப்ப பொங்கொளிசேர் கொல்நவிலுங்கோளரிமாத் தாஞ்சுமந்தகோலம்சேர் மன்னியசிங்காசனத்தின்மேல் வாள்நெடுங்கண் கன்னியராலிட்ட கவரிப்பொதியவிழ்ந்து ஆங் கின்னிளம்பூந்தென்றலியங்க மருங்கிருந்த மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல் முன்னம்முகிழ்த்த முகிழ்நிலாவந்தரும்ப அன்னவர்த்தம்மானோக்க முண்டாங்கணிமலர்சேர் பொன்னியல்கற்பகத்தின் காடுடுத்தமாடெல்லாம் மன்னியமந்தாரம் பூத்தமதுத்திவலை இன்னிசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர் மன்னியமாமயில்போற்கூந்தல் மழைத்தடங்கண் மின்னிடையாரோடும் விளையாடிவேண்டிடத்து மன்னும்மணித்தலத்து மாணிக்கமஞ்சரியின் மின்னினொளிசேர் பளிங்குவிளிம்படுத்த மன்னும்பவளக்கால் செம்பொன் செய்மண்டபத்துள் அன்னநடைய அரம்பயர்த்தம்வகை வளர்த்த இன்னிசை யாழ்பாடல்கேட்டின்புற்று இருவிசும்பில் மன்னுமழைதழும் வாணிலாநீண்மதிதோய் மின்னினொளிசேர் விசும்பூரும்மாளிகைமேல் மன்னுமணி விளக்கைமாட்டி மழைக்கண்ணார் பன்னுவிசித்திரமாப் பாப்படுத்தபள்ளிமேல் துன்னியசாலேகம் சூழ்கதவம்தாள் திறப்ப அன்னமுழக்க நெறிந்துக்கவாள்நீலச் சின்னநறுந்தாது சூடி ஓர்மந்தாரம் துன்னுநறுமலரால் தோள்கொட்டி கற்பகத்தின் மன்னுமலர்வாய் மணிவண்டுபின்தொடர இன்னிளம்பூந்தென்றல் புகுந்தீங்கிளமுலைமேல் நன்னறுஞ்சந்தனச்சேறு புலர்த்த தாங்கருஞ்சீர் மின்னிடைமேல் கைவைத்திருந்து ஏந்திளமுலைமேல் பொன்னரும்பாரம்புலம்ப அகங்குழைந்தாங்கு இன்னவுருவின் இமையாத்தடங்கண்ணார் அன்னவர்த்தம்மானோக்கமுண்டு ஆங்கணிமுறுவல் இன்னமுதம் மாந்தியிருப்பர் இதுவன்றே அன்னவறத்தின் பயனாவது ஒண்பொருளும் அன்னதிறத்ததே யாதலால் காமத்தின் மன்னும்வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின் அன்னநடையாரலரேச ஆடவர்மேல் மன்னும்மடலூரா ரென்பதோர்வாசகமும் தென்னுரையில் கேட்டறிவதுண்டு அதனையாம் தெளியோம் மன்னும் வடநெறியே வேண்டினோம் வேண்டாதார் தென்னன்பொதியில் செழுஞ்சந்தனக்குழம்பின் அன்னதோர் தன்மையறியாதார் ஆயன்வேய் இன்னிசை யோசைக்கு இரங்காதார் மால்விடையின் மன்னுமணி புலம்பவாடாதார் பெண்ணைமேல் பின்னும் அவ்வன்றிற்பேடைவாய்ச் சிறுகுரலுக்கு உன்னியுடலுருகிநையாதார் உம்பவர்வாய்த் துன்னிமதியுகுத்த தூதிலா நீள்நெருப்பில் தம்முடலம்வேவத் தளராதார் காமவேள் மன்னுஞ்சிலைவாய் மலர்வாளிகோத்தெய்ய பொன்னொடுவீதிபுகாதார் தம்பூவணைமேல் சின்னமலர்க்குழலும் அல்குலும்மென்முலையும் இன்னிளவாடைதடவத் தாம்கண்துயிலும் பொன்னனையார் பின்னுந்திருவுறுக போர்வேந்தன் தன்னுடையதாதை பணியாலரசொழிந்து பொன்னகரம் பின்னேபுலம்ப வலங்கொண்டு மன்னும்வளநாடு கைவிட்டு மாதிரங்கள் மின்னுருவில் விண்தேர் திரிந்துவெளிப்பட்டு கல்நிறைந்துதீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று பின்னுந்திரைவயிற்றுப் பேயேதிரிந்துலவா கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடுங்கதிரோன் துன்னுவெயில்வறுத்த வெம்பரல்மேல் பஞ்சடியால் மன்னனிராமன்பின் வைதேவிஎன்றுரைக்கும் அன்னநடைய அணங்குநடந்திலளே? பின்னும்கருநெடுங்கண் செவ்வாய்ப்பிணைநோக்கின் மின்னனையநுண்மருங்குல் வேகவதியென்றுரைக்கும் கன்னி தன் இன்னுயிராம் காதலனைக்காணது தன்னுடைய முன்தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு அன்னவனை நோக்காது அழித்துரப்பி வாளமருள் கல்நவில்தோள்காளையைக் கைப்பிடித்துமீண்டும்போய் பொன்னவிலுமாகம் புணர்ந்திலளே? பூங்கங்கை முன்னம் புனல்பரக்கும் நல்நாடன் மின்னாடும் கொன்னவிலும்நீள்வேல் குருக்கள் குலமதலை தன்னிகரொன்றில்லாத வென்றித்தனஞ்சயனை பன்னாகராயன் மடப்பாவை பாவைதன் மன்னியநாணச்சம் மடமென்றிவையகல தன்னுடைய கொங்கை முகம்நெரிய தானவன்தன் பொன்வரையாகம் தழீஇக்கொண்டுபோய் தனது நல்நகரம்புக்கு நயந்தினிதுவாழ்ந்ததுவும் முன்னுரையில் கேட்டறிவதில்லையே? சூழ்கடலுள் பொன்னகரஞ்செற்ற புரந்தரனோடேரொக்கும் மன்னவன்வாணன் அவுணர்க்குவாள்வேந்தன் தன்னுடையபாவை உலகத்துத்தன்னொக்கும் கன்னியரையில்லாத காட்சியாள் தன்னுடைய இன்னுயிர்த்தோழியால் எம்பெருமானீன்துழாய் மன்னும்மணிவரைத்தோள் மாயவன் பாவியேன் என்னையிதுவிளைத்த ஈரிரண்டுமால்வரைத்தோள் மன்னவன்தன்காதலனை மாயத்தாற்கொண்டுபோய் கன்னிதன்பால்வைக்க மற்றவனோடெத்தனையோ மன்னியபேரின்பமெய்தினாள் மற்றிவைதான் என்னாலேகேட்டீரே? ஏழைகாள்! என்னுரைக்கேன்? மன்னுமலையரயன் பொற்பாவை வாள்நிலா மின்னுமணிமுறுவல் செவ்வாயுமையென்னும் அன்னநடைய அணங்கு நுடங்கிடைசேர் பொன்னுடம்புவாடப் புலனைந்தும்நொந்தகல தன்னுடையகூழைச் சடாபாரம்தாந்தரித்து ஆங்கு அன்னவருந்தவத்தினூடுபோய் ஆயிரந்தோள் மன்னுகரதலங்கள் மட்டித்து மாதிரங்கள் மின்னியெரிவீச மேலெடுத்தசூழ்கழற்கால் மன்னுகுலவரையும் மாருதமும்தாரகையும் தன்னினுடனே சுழலச்சுழன்றாடும் கொல்நவிலும் மூவிலைவேல் கூத்தன்பொடியாடி அன்னவன்தன் பொன்னகலம் சென்றாங்கணைந்திலளே? பன்னியுரைக்குங்கால் பாரதமாம் பாவியேற்கு என்னுறுநோய் யானுரைப்பக்கேண்மின் இரும்பொழில்சூழ் மன்னுமறையோர் திருநறையூர்மாமலைபோல் பொன்னியலுமாடக் கவாடம்கடந்துபுக்கு என்னுடையகண்களிப்ப நோக்கினேன் நோக்குதலும் மன்னன்திருமர்பும் வாயுமடியிணையும் பன்னுகரதலமும் கண்களும் பங்கயத்தின் பொன்னியல்காடு ஓர்மணிவரைமேல்பூத்ததுபோல் மின்னியொளிபடைப்ப வீழ்நாணும்தோள்வளையும் மன்னியகுண்டலமும் ஆரமும்நீண்முடியும் துன்னுவெயில்விரித்த சூளாமணியிமைப்ப மன்னும்மரதகக் குன்றின்மருங்கே ஓர் இன்னிளவஞ்சிக் கொடியொன்றுநின்றதுதான் அன்னமாய்மானாய் அணிமயிலாய்ஆங்கிடையே மின்னாய்இளவேயிரண்டாய் இணைச்செப்பாய் முன்னாயதொண்டையாய்க் கொண்டைகுலமிரண்டாய் அன்னதிருவுருவம் நின்றதறியாதே என்னுடையநெஞ்சும் அறிவும்இனவளையும் பொன்னியலும்மேகலையும் ஆங்கொழியப்போந்தேற்கு மன்னும்மறிகடலுமார்க்கும் மதியுகுத்த இன்னிலாவின்கதிரும் என்தனக்கேவெய்தாகும் தன்னுடையதன்மை தவிரத்தானெங்கொலோ? தென்னன்பொதியில் செழுஞ்சந்தின்தாதளைந்து மன்னிவ்வுலகை மனங்களிப்பவந்தியங்கும் இன்னிளம்பூந்தென்றலும் வீசுமெரியெனக்கே முன்னியபெண்ணைமேல் முள்முளரிக்கூட்டகத்து பின்னுமவ்வன்றில் பேடைவாய்ச்சிறுகுரலும் என்னுடையநெஞ்சுக்கு ஓரீர்வாளாம் என்செய்கேன்? கல்நவில்தோள்காமன் கருப்புச்சிலைவளைய கொல்நவிலும்பூங்கணைகள் கோத்துப்பொதவணைந்து தன்னுடையதோள்கழியவாங்கி தமியேன்மேல் என்னுடையநெஞ்சே இலக்காகவெய்கின்றான் பின்னிதனைக் காப்பீர்தானில்லையே பேதையேன் கன்நவிலுங்காட்டகத்து ஓர்வல்லிக்கடிமலரின் நன்நறுவாசம் மற்றாரானுமெய்தாமே மன்னும்வறுநிலத்து வாளாங்குகுத்ததுபோல் என்னுடையபெண்மையும் என்நலனும்என்முலையும் மன்னுமலர்மங்கைமைந்தன் கணபுரத்துப் பொன்மலைபோல்நின்றவன்தன்பொன்னகலம் தோயாவேல் என்னிவைதான்? வாளாஎனக்கேபொறையாகி முன்னிருந்துமூக்கின்று மூவாமைக்காப்பதோர் மன்னும்மருந்தறிவிரில்லையே? மல்விடையின் துன்னுபிடரெருத்துத் தூக்குண்டு வன்தொடரால் கன்னியர்கண்மிளிரக் கட்டுண்டு மாலைவாய் தன்னுடையநாவொழியாது ஆடுந்தனிமணியின் இன்னிசையோசையும் வந்தென்செவிதனக்கே கொன்நவிலுமெஃகின் கொடிதாய்நெடிதாகும் என்னிதனைக்காக்குமா? சொல்லீர் இதுவிளைத்த மன்னன்நறுந்துழாய்வாழ்மார்பன் மாமதிகோள் முன்னம்விடுத்த முகில்வண்ணன் காயாவின் சின்னநறும்பூந் திகழ்வண்ணன் வண்ணம்போல் அன்னகடலை மலையிட்டணைகட்டி மன்னனிராவணனை மாமண்டுவெஞ்சமத்து பொன்முடிகள்பத்தும் புரளச்சரந்துரந்து தென்னுலகமேற்றுவித்த சேவகனை ஆயிரங்கண் மன்னவன்வானமும் வானவர்த்தம்பொன்னும்லகும் தன்னுடையதோள்வலியால் கைக்கொண்டதானவனை பின்னோரரியுருவமாகி எரிவிழித்து கொல்நவிலும்வெஞ்சமதுக் கொல்லாதே வல்லாளன் மன்னும்மணிக்குஞ்சி பற்றிவரவீர்த்து தன்னுடையதாள்மேல் கிடாத்தி அவனுடைய பொன்னகலம்வள்ளுகிரால் போழ்ந்துபுகழ்படைத்த மின்னிலங்கும்ஆழிப்படைத் தடக்கைவீரனை மன்னிவ்வகலிடத்தை மாமுதுநீர்தான்விழுங்க பின்னுமோரேனமாய் புக்குவளைமருப்பில் கொன்னவிலுங்கூர்நுதிமேல் வைத்தெடுத்தகூத்தனை மன்னும்வடமலையை மத்தாகமாசுணத்தால் மின்னுமிருசுடரும் விண்ணும்பிறங்கொளியும் தன்னினுடனே சுழலமலைதிரித்து ஆங்கு இன்னமுதம் வானவரையூட்டி அவருடைய மன்னுந்துயர்க்கடிந்த வள்ளலை மற்றன்றியும் தன்னுருவம் ஆருமறியாமல் தானங்கு ஓர் மன்னுங்குறளுருவில் மாணியாய் மாவலிதன் பொன்னியலும்வேள்விக்கண் புக்கிருந்து போர்வேந்தர் மன்னைமனங்கொள்ள வஞ்சித்துநெஞ்சுருக்கி என்னுடையபாதத்தால் யானளப்பமூவடிமண் மன்னா! தருகென்று வாய்திறப்ப மற்றவனும் என்னால்தரப்பட்டதென்றலுமே அத்துணைக்கண் மின்னார்மணிமுடிபோய் விண்தடவ மேலெடுத்த பொன்னார்கனைகழற்கால் ஏழுலகும்போய்க்கடந்து அங்கு ஒன்னாவசுரர் துளங்கச்செலநீட்டி மன்னிவ்வகலிடத்தை மாவலியைவஞ்சித்து தன்னுலகமாக்குவித்த தாளானை தாமரைமேல் மின்னிடையாள்நாயகனை விண்ணகருள்பொன்மலையை பொன்னிமணிகொழிக்கும் பூங்குடந்தைப்போர் விடையை தென்னன்குறுங்குடியுள் செம்பவளக்குன்றினை மன்னியதண் சேறை வள்ளலை மாமலர்மேல் அன்னம்துயிலும் அணிநீர்வயலாலி என்னுடையவின்னமுதை எவ்வுள் பெருமலையை கன்னிமதிள்சூழ் கணமங்கைக்கற்பகத்தை மின்னையிருசுடரை வெள்ளறையுள்கல்லறைமேற் பொன்னை மரதகதைப் புட்குழியெம்போரேற்றை மன்னுமரங்கத்துஎம்மாமணியை வல்லவாழ் பின்னைமணாளனைப் பேரில்பிறப்பிலியை தொன்னீர்க்கடல்கிடந்த தோளாமணிச்சுடரை என்மனத்துமாலை இடவெந்தையீசனை மன்னுங்கடல்மல்லை மாயவனை வானவர்தம் சென்னிமணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை தன்னைப்பிறரறியாத் தத்துவத்தைமுத்தினை அன்னத்தைமீனை அரியைஅருமறையை முன்னிவ்வுலகுண்டமூர்த்தியை கோவலூர் மன்னுமிடைகழி யெம்மாயவனை பேயலறப் பின்னும்முலையுண்டபிள்ளையை அள்ளல்வாய் அன்னமிரைதேர் அழுந்தூரெழுஞ்சுடரை தெந்தில்லைச் சித்திரகூடத்துஎன் செல்வனை மின்னிமழைதவழும் வேங்கடத்துஎம்வித்தகனை மன்னனை மாலிருஞ்சோலைமணாளனை கொல்நவிலும் ஆழிப்படையானை கோட்டியூர் அன்னவுருவினரியை திருமெய்யத்து இன்னமுதவெள்ளத்தை இந்தளூரந்தணனை மன்னுமதிள்கச்சி வேளுக்கையாளரியை மன்னியபாடகத்து எம்மைந்தனை வெஃகாவில் உன்னியயோகத்துறக்கத்தை ஊரகத்துள் அன்னவனை அட்டபுயகரத்தெம்மானேற்றை என்னைமனங்கவர்ந்தஈசனை வானவர்த்தம் முன்னவனை மூழிக்களத்துவிளக்கினை அன்னவனை ஆதனூராண்டாளக்குமையனை நென்னலையின்றினை நாளையை நீர்மலைமேல் மன்னும்மறைநான்குமானானை புல்லாணித் தென்னன்தமிழை வடமொழியை நாங்கூரில் மன்னுமணிமாடக் கோயில்மணாளனை நல்நீர்த்தலைச்சங்கநாண்மதியை நான்வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத்தானை தென்னறையூர் மன்னுமணிமாடக் கோயில்மணாளனை கல்நவில்தோள்காளையைக் கண்டாங்குக்கைதொழுது என்னிலைமையெல்லாம் அறிவித்தால்எம்பெருமான் தன்னருளுமாகமும் தாரானேல் தன்னைநான் மின்னிடையார்சேரியிலும் வேதியர்கள்வாழ்விடத்தும் தன்னடியார்முன்பும் தரணிமுழுதாளும் கொல்நவிலும்வேல்வேந்தர்கூட்டத்தும்நாட்டகத்தும் தன்னிலைமையெல்லாம் அறிவிப்பன் தான்முனநாள் மின்னிடையாய்ச்சியர்த்தம் சேரிக்களவிங்கண் துன்னுபடல்திறந்துபுக்கு தயிர்வெண்ணெய் தன்வயிறார விழுங்க கொழுங்கயல்கண் மன்னுமடவோர்கள் பற்றியோர்வான்கயிற்றால் பின்னுமுரலோடு கட்டுண்டபெற்றிமையும் அன்னதோர்பூதமாய் ஆயர்விழவின்கண் துன்னுசகடத்தால் புக்கபெருஞ்சோற்றை முன்னிருந்துமுற்றத்தான் துற்றியதெற்றெனவும் மன்னர்பெருஞ்சவையுள் வாழ்வேந்தர்தூதனாய் தன்னையிகழ்ந்துரைப்பத் தான்முனநாள்சென்றதுவும் மன்னுபறைகறங்க மங்கையர்த்தம்கண்களிப்ப கொன்னவிலுங்கூத்தனாய்ப் பெயர்த்துங்குடமாடி என்னிவன்? என்னப்படுகின்றஈடறவும் தென்னிலங்கையாட்டி அரக்கர்குலப்பாவை மன்னனிராவணன்தன் நல்தங்கை வாளெயிற்றுத் துன்னுசுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி பொன்னிறங்கொண்டு புலர்ந்தெழுந்தகாமத்தால் தன்னைநயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து மன்னியதிண்ணெனவும் வாய்த்தமலைபோலும் தன்னிகரொன்றில்லாத தாடகையை மாமுனிக்காகத் தென்னுலகமேற்றுவித்த திண்திறலும் மற்றிவைதான் உன்னியுலவாவுலகறிய ஊர்வன்நான் முன்னிமுளைத்தெழுந்து ஓங்கியொளிபரந்த மன்னியம்பூம் பெண்ணை மடல்.
|
2713.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின், சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள், மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல், மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச
|
2718.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 11
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில், நன்னெறிமேம் பட்டன நான்கன்றே, - நான்கினிலும் பின்னையது பின்னைப் பெயர்த்தரு மென்பது,ஓர் தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்
|
2723.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னிய சிங்கா சனத்தின்மேல், - வாணொடுங்கண் கன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து,ஆங் கின்னளம்பூந் தென்றல் இயங்க, - மருங்கிருந்த மின்னனைய _ண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்
|
2727.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய், மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல், மன்னும் மளிவிளக்கை மாட்டி, - மழைக்கண்ணார் பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
|
2729.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 11
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர இன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல் நன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, - தாங்கருஞ்சீர் மின்னிடைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல்
|
2732.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 3
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும், தென்னுறையில் கேட்டறிவ துண்டு, - அதனை யாம்தெளியோம், மன்னும் வடநெறியே வேண்டினோம்-வேண்டாதார் தென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின்,.0
|
2738.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும், அன்ன நடைய அணங்கு நடந்திலளே?, பின்னும் கருநெடுங்கண் செவ்வய்ப் பிணைநோக்கின், மின்னனைய _ண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்
|
2747.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 7
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும், தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும், கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி, அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?
|
2760.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் - மாமதிகோள் முன்னம் விடுத்த முகில்வண்ணன் - காயாவின் சின்ன நறும்பூந் திகழ்வண்ணன் - வண்ணம்போல் அன்ன கடலை மலையிட் டணைகட்டி
|
2761.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து, பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை, - ஆயிரங்கண் மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னும்லகும்
|
2766.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னும் குறளுருவில் மாணியாய், - மாவலிதன் பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர் மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி, என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்
|
2767.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னா. தரு கென்று வாய்திறப்ப, - மற்றவனும் என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண் மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங்
|
2771.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னும் அரங்கத்தெம் மாமணியை, - வல்லவாழ் பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை, தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை, என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை
|
2772.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னும் கடன்மல்லை மாயவனை, - வானவர்தம் சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை, தன்னைப் பிறரறியாத் தத்துவத்தை முத்தினை, அன்னத்தை மீனை அரியை அருமறையை,.
|
2778.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை, நன்னீர்த் தலைச்சங்க நான்மதியை, - நான்வணங்கும் கண்ணனைக் கண்ண புரத்தானை, தென்னறையூர் மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை
|
2800.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 5
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவலுள் மா மலராள் தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே
|
2900.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 4
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆத்ம உபதேசம்
மனன் அகம் மலம் அற மலர்மிசை எழுதரும் மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே
|
3170.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை
மனிசரும் மற்றும் முற்றும் ஆய் மாயப் பிறவி பிறந்த தனியன் பிறப்பிலி தன்னை தடங் கடல் சேர்ந்த பிரானை கனியை கரும்பின் இன் சாற்றை கட்டியை தேனை அமுதை முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே
|
3490.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 11
நம்மாழ்வார்
திருவாய் மொழி
கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களி
மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து தனக்கு வேண்டு உருக்கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும் புனத் துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன் தன் மாயங்களே நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே?
|
3807.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 31
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது
மனமே உன்னை வல்வினையேன் இரந்து கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்! புனம் மேவிய பூந் தண் துழாய் அலங்கல் இனம் ஏதும் இலானை அடைவதுமே
|