சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean   முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் தே%
தே     தேசும்     தேடற்கு     தேட்டு     தேனுகன்     தேனை     தேனொடு     தேன்     தேரார்     தேருங்கால்     தேர்     தேவராய்     தேவரையும்     தேவர்     தேவிமார்     தேவு     தேவும்    
Number of search results : 26
216.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

தேனுகன் ஆவி செகுத்துப் பனங்கனி
தான் எறிந்திட்ட தடம் பெருந்தோளினால்
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆனிரை காத்தானால் இன்று முற்றும்
      அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும்
278.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் குழல் ஊதல்

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்
      தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்
கானகம் படி உலாவி உலாவிக்
      கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது
மேனகையொடு திலோத்தமை அரம்பை
      உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி
      ஆடல் பாடல் இவை மாறினர் தாமே
420.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமரி
      குறளும் ஆகி
மூ-உருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்
      முடிப்பான் கோயில்
சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி
      ஊசல் ஆடிப்
பூ-அணைமேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும்
      புனல் அரங்கமே
658.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கநாதனது அடியார்க்கு அடியேன்

தேட்டு அருந் திறல்-தேனினைத் தென்
      அரங்கனைத் திருமாது வாழ்
வாட்டம் இல் வனமாலை மார்வனை
      வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு-
      எய்தும் மெய்யடியார்கள்தம்
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது
      காணும் கண் பயன் ஆவதே
728.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தாலாட்டு

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்து அடி வணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கருமணியே
ஏ வரி வெஞ்சிலை வலவா இராகவனே தாலேலோ
739.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தசரதன் புலம்பல்

தேன் நகு மா மலர்க் கூந்தற் கௌசலையும்
      சுமித்திரையும் சிந்தை நோவ
கூன் உருவின் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட
      கொடியவள்தன் சொற்கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
       வளநகரைத் துறந்து நானும்
வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
      மனு-குலத்தார் தங்கள் கோவே
983.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி ஆச்சிரமம்

தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி
      திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த
      பனி முகில் வண்ணன் எம் பெருமான்-
காரணம்- தன்னால் கடும் புனல் கயத்த
      கரு வரை பிளவு எழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே
1177.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 2

தேன் அமர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடம் அமர்ந்த
வானவர்-தங்கள் பிரானை மங்கையர்-கோன்மருவார்
ஊன் அமர் வேல் கலிகன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்
தான் இவை கற்று வல்லார்மேல் சாரா தீவினை-தானே
1277.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில்

தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
வானவர்-கோனைக் கண்டமை சொல்லும்
      மங்கையார் வாள் கலிகன்றி
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்
      ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு
      வானவர் ஆகுவர் மகிழ்ந்தே             
1467.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:2

தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்-கோன் மருவார்
ஊன் ஆர் வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார்
கோன் ஆய் வானவர்-தம் கொடி மா நகர் கூடுவரே             
1581.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சேறை

தேர் ஆளும் வாள் அரக்கன் தென் இலங்கை
      வெம் சமத்துப் பொன்றி வீழ
போர் ஆளும் சிலை-அதனால் பொரு கணைகள்
      போக்குவித்தாய் என்று நாளும்
தார் ஆளும் வரை மார்பன் தண் சேறை
      எம் பெருமான் உம்பர் ஆளும்
பேராளன் பேர் ஓதும் பெரியோரை
      ஒருகாலும் பிரிகிலேனே
1678.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 3

தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டு உரைத்த தமிழ்-மாலை
நா மருவி இவை பாட வினை ஆய நண்ணாவே
1824.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 1

தேனுகன் ஆவி போய் உக அங்கு ஓர்
      செழுந் திரள் பனங்கனி உதிர
தான் உகந்து எறிந்த தடங் கடல் வண்ணர்
      எண்ணி முன் இடம் கொண்ட கோயில்-
வானகச் சோலை மரகதச் சாயல்
      மா மணிக் கல் அதர் நுழைந்து
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே
1837.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 2

தேடற்கு அரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற
ஆடல் பறவையனை அணி ஆய்-இழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை-பாவங்களே
2011.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தம

தேவரையும் அசுரரையும் திசைகளையும்
      கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம் பெருமான்
      உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
கா வளரும் பொழில் மங்கைக் கலிகன்றி
      ஒலி மாலை கற்று வல்லார்
பூ வளரும் திருமகளால் அருள்பெற்றுப்
      பொன்-உலகில் பொலிவர்-தாமே   
2020.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்

தேனொடு வண்டு ஆலும் திருமாலிருஞ்சோலை
தான் இடமாக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு-ஆள் ஆனார் அல்லாதார்
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே
2071.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 20   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள
      தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி
போர் ஆளன் ஆயிரந் தோள் வாணன் மாள
      பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க
பார் ஆளன் பார் இடந்து பாரை உண்டு
      பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட
பேர் ஆளன் பேர் ஓதும் பெண்ணை மண்மேல்
      பெருந் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே?
2077.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 26   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
      தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த
      அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த அமரர்-கோமான்
      அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது
      நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே
2291.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 10   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசு இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேர் ஓத
நலம் புரிந்து சென்று அடையும் நன்கு
2383.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 2   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும்
பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான்பால்
2435.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 54   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

தேவராய் நிற்கும் அத் தேவும் அத் தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் யாவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை  
2864.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 1   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரைக்
கூர் ஆழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போது ஒரு சிந்தைசெய்தே   
3023.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல்

தேவும் எப் பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே?   
3671.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும்

தேவிமார் ஆவார் திருமகள் பூமி
      ஏவ மற்று அமரர் ஆட்செய்வார்
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி
      வேண்டு வேண்டு உருவம் நின் உருவம்
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்
      கண்ணது ஓர் பவள வாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த
      அப்பனே காணுமாறு அருளாய்
3714.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திரு

தேனை நன் பாலை கன்னலை அமுதை
      திருந்து உலகு உண்ட அம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
      மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் வண் சடகோபன்
      சொன்ன ஆயிரத்துள் இப் பத்தும்
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும்
      பிறவி மா மாயக் கூத்தினையே
3866.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 90   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான தி

தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூவுலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திருநாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி? அந்தோ
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:45 +0000