54.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
அம்புலிப் பருவம்
தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப் பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான் என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ நின்முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப் போ
|
223.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
அம்மம் தர மறுத்தல்
தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு தளர்நடைஇட்டு வருவான் பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
|
413.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 2
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருவரங்கம் (2)
தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசைநோக்கி மலர்க்கண் வைத்த என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரே?
|
761.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 10
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல் தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல் நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே
|
1113.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் தடங் கடல் நுடங்கு எயில் இலங்கை வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயந்திருந்த என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?- இடவெந்தை எந்தை பிரானே
|
1503.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநறையூர்:3
தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய் தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய் தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய் தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர் மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
|
1768.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருப்புல்லாணி: 1
தன்னை நைவிக்கிலேன் வல் வினையேன் தொழுதும் எழு- பொன்னை நைவிக்கும் அப் பூஞ் செருந்தி மண நீழல்வாய் என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே
|
1884.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 7
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்
தன் மகன் ஆக வன் பேய்ச்சி தான் முலை உண்ணக் கொடுக்க வன் மகன் ஆய் அவள் ஆவி வாங்கி முலை உண்ட நம்பீ நன் மகள் ஆய்மகளோடு நானில-மங்கை மணாளா என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே
|
2715.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல், மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன், என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, - மழைக்கூந்தல் தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்
|
2736.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 7
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து, பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு, மன்னும் வளநாடு கைவிட்டு, - மாதிரங்கள் மின்னுருவில் விண்டோர் திரிந்து வெளிப்பட்டு
|
2743.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 3
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும், கன்னியரை யில்லாத காட்சியாள், - தன்னுடைய இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய், மன்னும் மணிவரைத்தோள் மாயவன், - பாவியேன்
|
2759.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின், இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே, கொன்னவிலு மெகில் கொடிதாய் நொடிதாகும், என்னிதனைக் காக்குமா சொல்லீர்?, இதுவிளைத்த
|
2762.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 11
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவை பின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து, கொன்னவிலும் வெஞ்சமதுக் கொல்லாதே, - வல்லாளன் மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து
|
2763.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி, - அவனுடைய பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த மின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை, மின்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க
|
2765.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 3
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
தன்னின் உடனே சுழ்ல மலைதிரித்து,ஆங்கு இன்னமுதம் வானவரை யூட்டி, அவருடைய மன்னும் துயர்க்கடிந்த வள்ளலை, மற் றன்றியும், தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர்
|
2780.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 7
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும், கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும் தன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன், - தான்முனநாள் மின்னிடை யாய்ச்சியர்த்தம் சேரிக் களவிங்கண்
|
2784.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 11
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
தன்னை யிகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும், மன்னு பறைகறங்க மங்கையர்த்தம் கண்களிப்ப
|
2788.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து, மன்னிய திண்ணெனவும்-வாய்த்த மலைபோலும்
|
2789.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
தன்னிகரொன் றில்லாத தாடகையை, மாமுனிக்காகத் தென்னுலகம் ஏற்றுவித்த திண்டிறலும்-மற்றிவைதான்
|
2887.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 2
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள் தன்னை உற்று ஆட்செய்ய என்னை உற்றான் இன்று தன் தகவால் தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே
|
3608.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 8
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ பன்மைப் படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடும் காலத்து நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி தன்னுள்ளே தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே?
|