199.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
காப்பிடல்
இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் கும்பக் களிறு அட்ட கோவே கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே செம்பொன் மதில் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் கம்பக் கபாலி காண் அங்கு கடிது ஓடிக் காப்பிட வாராய்
|
515.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 2
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
சிற்றில் சிதையேல் எனல்
இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இழைத்த இச் சிற்றிலை நன்றும் கண் உற நோக்கி நாம் கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய் அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் என்றும் உன் தனக்கு எங்கள்மேல் இரக் கம் எழாதது எம் பாவமே
|
593.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 7
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்றபிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே
|
764.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 13
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும் இட்டிடைப் பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும் நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே?
|
817.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 66
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்கொலோ அன்று பார் அளந்த பாத-போதை உன்னி வானின்மேல் சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே?
|
889.0
திருமாலை -பாசுரம்
பாடல் # 18
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
திருமாலை
இனி திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக்கண்ணன் எம்மான் கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள் பனி-அரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே?
|
942.0
கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்
பாடல் # 6
மதுரகவி ஆழ்வார்
கண்ணி நுண் சிறுத்தாம்பு
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே
|
1072.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவல்லிக்கேணி
இன் துணைப் பதுமத்து அலர்மகள்-தனக்கும் இன்பன் நல் புவி-தனக்கு இறைவன் தன் துணை ஆயர் பாவை நப்பின்னை -தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும் என் துணை எந்தை தந்தை தம்மானை- திருவல்லிக்கேணிக் கண்டேனே
|
1575.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநறையூர்:10
இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு- இம்மையே அருள்பெற்றமையால் அடும் துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் தோற்றத் தொல் நெறியை வையம் தொழப்படும் முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை பத்தர்-தாம் நுகர்கின்றது ஓர் கனியை காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை-இன்று கண்டுகொண்டேனே
|
1950.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுத
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியொடும் பொன் ஆர் சார்ங்கம் உடைய அடிகளை- இன்னார் என்று அறியேன்
|
2168.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 87
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
இனி யார் புகுவார் எழு நரக வாசல்? முனியாது மூரித் தாள் கோமின் கனி சாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு
|
2216.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 35
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
இனிது என்பர் காமம் அதனிலும் ஆற்ற இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் இனிது என்று காமம் நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல் சேம நீர் ஆகும் சிறிது
|
2268.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 87
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச் சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று கருக்கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் திருக்கோட்டி எந்தை திறம்
|
2283.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 2
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் பொன் தோய் வரை மார்பில் பூந் துழாய் அன்று திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை மருக்கண்டுகொண்டு என் மனம்
|
2364.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 83
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
இனி அவன் மாயன் என உரைப்பரேலும் இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங் கழலான் உள்ளத்தின் உள்ளே உளன்
|
2388.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 7
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
இன்று ஆக நாளையே ஆக இனிச் சிறிது நின்று ஆக நின் அருள் என்பாலதே நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இலை
|
2477.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 96
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம் பெருமான் உன்னை இனி அறிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்
|
2506.0
திருவிருத்தம் -பாசுரம்
பாடல் # 29
நம்மாழ்வார்
திருவிருத்தம்
திருவிருத்தம்
இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று அன்னன்ன சொல்லா பெடையொடும் போய்வரும் நீலம் உண்ட மின் அன்ன மேனிப் பெருமான் உலகில் பெண் தூது செல்லா அன்னன்ன நீர்மைகொலோ? குடிச் சீர்மை இல் அன்னங்களே
|
2655.0
நம்மாழ்வார் -பாசுரம்
பாடல் # 71
இயற்பா
நம்மாழ்வார்
பெரியதிருவந்தாதி
இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே? தனி நின்ற சார்வு இலா மூர்த்தி பனி நீர் அகத்து உலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு முகத்தான் நின் உந்தி முதல்
|
2725.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 7
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
இன்னைசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர், மன்னிய மாமயில்போல் கூந்தல், - மழைத்தடங்கண் மின்னிடையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து, மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்
|
2751.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 11
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான், அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே, மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய், முன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய்
|
2753.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 2
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
இன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும். தன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ, - தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து, மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்
|
2754.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 3
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே, முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து, பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன்
|
2820.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 3
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என்? எண் இறந்த துன்பம் தரு நிரயம் பல சூழில் என்? தொல் உலகில் மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே
|
2897.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 1
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
இன்பு உற்ற சீலத்து இராமாநுச என்றும் எவ்விடத்தும் என்பு உற்ற நோய் உடல்தோறும் பிறந்து இறந்து எண் அரிய துன்பு உற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே
|
3035.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 7
நம்மாழ்வார்
திருவாய் மொழி
அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்
இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய் கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே
|
3401.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின்
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும் இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும் இன ஆயர் தலைவனும் யானே என்னும் இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ? இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே?
|
3522.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய்
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய் தென் திசைத் திலதம் அனைய திருக்கோளூர்க்கே சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே
|
3568.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் எ
இன் அமுது எனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே
|
3630.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 8
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலை
இன் உயிர்க்கு ஏழையர்மேல் வளையும் இணை நீல விற்கொல் மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலைகொல் மதனன் தன் உயிர்த் தாதை கண்ண பெருமான் புருவம்? அவையே என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே
|
3654.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்
இன் கவி பாடும் பரம் கவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே
|
3660.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அ
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் ஏழ் உலகை இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன்விளை அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ?
|
3810.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 34
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது
இன்றிப் போக இருவினையும் கெடுத்து ஒன்றி யாக்கை புகாமை உய்யக்கொள்வான் நின்ற வேங்கடம் நீள் நிலத்து உள்ளது சென்று தேவர்கள் கைதொழுவார்களே
|
3825.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 49
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொரு
இன் உயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை என் உயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடைகாள் என் உயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர் என் உயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ?
|
3835.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 59
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொரு
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத் தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே
|
3871.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 95
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக்
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்? இணை முலை நமுக நுண் இடை நுடங்க துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப் பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ
|
3903.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொ
இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம் ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கு உம்பர் ஊரே
|
3976.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப
இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம்போகப் புணர்த்தது என் செய்வான்? குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான் ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே
|