| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
வசனமிக வேற்றி ...... மறவாதே வசனமிக ஏற்றி மறவாதே 192 - வசனமிக ஏற்றி (பழநி) Songs from this thalam பழநி
192 பழநி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 89 - வாரியார் # 183 )
வசனமிக ஏற்றி
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதனன தாத்த ...... தனதான
தனதனன தாத்த ...... தனதான
மனதுதுய ராற்றி ...... லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே
இகபரசெள பாக்ய ...... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
மனது துயர் ஆற்றில் உழலாதே
இசைபயில் ஷடாட்சரம் அதாலே
இகபரசெள பாக்யம் அருள்வாயே
பசுபதிசி வாக்யம் உணர்வோனே
பழனிமலை வீற்(று) அருளும் வேலா
அசுரர்கிளை வாட்டி மிகவாழ
அமரர் சிறை மீட்ட பெருமாளே.
உருவேற ஏற மிகவும் ஜபம்செய்து (அந்த ஜபத்தால்) உன்னை மறவாமல் இருந்து, என் மனம் துயரம் தரும் வழிகளில் அலைந்து திரியாதிருக்கவும் மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற ஆறெழுத்து மந்திரம் (சரவணபவ) தரும் பயனாலே இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வை அருள் புரிவாயாக சிவபிரானது வேத சிவாகமங்களை அறிந்தவனே பழனிமலையில் எழுந்தருளியிருந்து அருள் புரியும் வேலனே அசுரர் கூட்டங்களை வாட்டி ஒடுக்கியும், தேவர்கள் நன்கு வாழும்படியாக சிறையினின்று மீட்டுவித்த பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: வசனமிக ஏற்றி ... உருவேற ஏற மிகவும் ஜபம்செய்து
மறவாதே ... (அந்த ஜபத்தால்) உன்னை மறவாமல் இருந்து,
மனது துயர் ஆற்றில் ... என் மனம் துயரம் தரும் வழிகளில்
உழலாதே ... அலைந்து திரியாதிருக்கவும்
இசைபயில் ... மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற
ஷடாட்சரம் அதாலே ... ஆறெழுத்து மந்திரம் (சரவணபவ)
தரும் பயனாலே
இகபரசெள பாக்யம் ... இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வை
அருள்வாயே ... அருள் புரிவாயாக
பசுபதிசி வாக்யம் ... சிவபிரானது வேத சிவாகமங்களை
உணர்வோனே ... அறிந்தவனே
பழனிமலை வீற்(று) ... பழனிமலையில் எழுந்தருளியிருந்து
அருளும் வேலா ... அருள் புரியும் வேலனே
அசுரர்கிளை வாட்டி ... அசுரர் கூட்டங்களை வாட்டி ஒடுக்கியும்,
மிகவாழ அமரர் ... தேவர்கள் நன்கு வாழும்படியாக
சிறை மீட்ட பெருமாளே. ... சிறையினின்று மீட்டுவித்த பெருமாளே.
தனதனன தாத்த ...... தனதான
தனதனன தாத்த ...... தனதான