சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Create your own page with list of Thirumurai pathigams/Thiruppugazh songs - Experimental stage

My Thirumurai/Thiruppugazh List: thirumurai

சமய குரவர் துதி
1 1.001 - திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு உடைய செவியன், விடை நட்டபாடை  ( திருப்பிரமபுரம் (சீர்காழி))  
2 1.018 - திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், நட்டபாடை  ( திருநின்றியூர்)  
3 1.023 - திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மடையில் வாளை பாய, மாதரார் குடையும் தக்கராகம்  ( திருக்கோலக்கா)  
4 1.044 - திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துணி வளர் திங்கள் துளங்கி தக்கராகம்  ( திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி))  
5 1.098 - திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நன்று உடையானை, தீயது இலானை, குறிஞ்சி  ( திருச்சிராப்பள்ளி)  
6 2.008 - திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் உலாவும் மதி வந்து இந்தளம்  ( திருச்சிக்கல்)  
7 3.003 - திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இயல் இசை எனும் பொருளின் கொல்லி  ( திருப்புகலி -(சீர்காழி ))  
8 7.100 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தான் எனை முன் படைத்தான்; பஞ்சமம்  ( திருக்கயிலாயம்)  
9 திருப்புகழ் # 101   விறல்மாரன் ஐந்து ( குருஜி # 55 - வாரியார் # 101 )  (திருச்செந்தூர்)  
10 திருப்புகழ் # 274   துப் பார் அப்பு ( குருஜி # 134 - வாரியார் # 270 )  (திருத்தணிகை)  
11 திருப்புகழ் # 401   இருவினை அஞ்ச ( குருஜி # 452 - வாரியார் # 517 )  (திருவருணை)  
12 அபிராமி அந்தாதி # 0   தாரமர் கொன்றையும் சண்பகமாலையும்  
13 அபிராமி அந்தாதி # 2   துணையும் தொழுந்தெய்வமும், பெற்ற  
14 அபிராமி அந்தாதி # 3   அறிந்தேன் எவரும் அறியா  
15 அபிராமி அந்தாதி # 8   சுந்தரி! எந்தை துணைவி!  
16 அபிராமியம்மை பதிகம் # 1   கலையாத கல்வியும், குறையாத  
17 அபிராமியம்மை பதிகம் # 22   சகல செல்வங்களும் தரும்  
18 அபயாம்பிகை சதகம்‌ # 0   அபயாம்பிகை சதகம்‌ அன்பாய்‌  
19 அபயாம்பிகை சதகம்‌ # 2   அஞ்சு முகத்தி நவமுகத்தி
ஆறு
 
வாழ்த்து

நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி


வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி

சமய குரவர் துதி

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு 1 -ஆம் திருமுறை 1.123 விநாயகர் வணக்கம் -பண் - வியாழக்குறிஞ்சி (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

திருவருணைக் கலம்பகம்
சைவத்தின் மேற்சமயம் வேறில்லை யதிற்சார் சிவமாம்
தெய்வத்தின் மேற்தெய்வ மில்லையெனும் நான்மறைச் செம்பொருள்
வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே.

Back to Top
1 திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.001   தோடு உடைய செவியன், விடை  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
முன் பிறப்பு நல் வினை கை கூட, இறைவன் அருள் பெற

[1]தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடுஉடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[3]நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,
ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[10]புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா
ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது! என்ன,
பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

Back to Top
2 திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.018   சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருநின்றியூர் ; அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு இலட்சுமியீசுவரர் திருவடிகள் போற்றி )

[1]சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு;
பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக்
காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும்
நீல மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.

[2]அச்சம் இலர்; பாவம் இலர்; கேடும் இலர்; அடியார்,
நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்
நச்சம் மிடறு உடையார், நறுங்கொன்றை நயந்து ஆளும்
பச்சம் உடை அடிகள், திருப்பாதம் பணிவாரே.

[3]பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும், ஆர
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை;
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள், நின்றியூரில்
உறையும் இறை, அல்லது எனது உள்ளம் உணராதே!

[4]பூண்ட வரைமார்பில் புரிநூலன், விரி கொன்றை
ஈண்ட அதனோடு ஒரு பால் அம்மதி அதனைத்
தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்
ஆண்ட கழல் தொழல் அல்லது, அறியார் அவர் அறிவே!

[5]குழலின் இசை வண்டின் இசை கண்டு, குயில் கூவும்
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்,
அழலின் வலன் அங்கையது ஏந்தி, அனல் ஆடும்
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகணே.

[6]மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒரு பாகம்,
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த
வீரன், மலி அழகு ஆர் பொழில் மிடையும் திரு நின்றி
யூரன், கழல் அல்லாது, எனது உள்ளம் உணராதே!

[7]பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும்
பெற்றி அது ஆகித் திரி தேவர் பெருமானார்,
சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்
நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே.

[8]நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்,
அல்லர் என, ஆவர் என, நின்றும் அறிவு அரிய
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம்
செல்வர் அடி அல்லாது, என சிந்தை உணராதே!

[9]நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே,
நெறி இல்லவர் குறிகள் நினையாதே, நின்றியூரில்
மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே!

[10]குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக
நின்று அங்கு ஒருவிரலால் உற வைத்தான் நின்றியூரை
நன்று ஆர்தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக் குறைவு இன்றி நிறை புகழே.

Back to Top
3 திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.023   மடையில் வாளை பாய, மாதரார் குடையும்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருக்கோலக்கா ; அருள்தரு ஓசைகொடுத்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்தபுரீசர் திருவடிகள் போற்றி )
நல்ல தாளம், இசை கை வர

[1]மடையில் வாளை பாய, மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீழ்
உடையும், கொண்ட உருவம் என்கொலோ?

[2]பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னி
கொண்டான், கோலக்காவு கோயிலாக்
கண்டான், பாதம் கையால் கூப்பவே,
உண்டான் நஞ்சை, உலகம் உய்யவே.

[3]பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை,
கோணல் பிறையன், குழகன், கோலக்கா
மாணப் பாடி, மறை வல்லானையே
பேண, பறையும், பிணிகள் ஆனவே.

[4]தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்!
மழுக் கொள் செல்வன், மறி சேர் அம் கையான்,
குழுக் கொள் பூதப்படையான், கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே!

[5]மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா,
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயில் ஆர் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்க, பறையும், பாவமே.

[6]வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்!
கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்,
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்
அடிகள், பாதம் அடைந்து வாழ்மினே!

[7]நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம்,
குழல் ஆர், பண் செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே.

[8]எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனை
முறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்
குறி ஆர் பண் செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

[9]நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில்
ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா,
கூற்றம் உதைத்த, குழகன்-கோலக்கா
ஏற்றன்-பாதம் ஏத்தி வாழ்மினே!

[10]பெற்ற மாசு பிறக்கும் சமணரும்,
உற்ற துவர் தோய் உரு இலாளரும்,
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவ, பறையும், பாவமே.

[11]நலம் கொள் காழி ஞானசம்பந்தன்,
குலம் கொள் கோலக்கா உளானையே
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்,
உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.

Back to Top
4 திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.044   துணி வளர் திங்கள் துளங்கி  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) ; அருள்தரு பாலசுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு மாற்றறிவரதர் திருவடிகள் போற்றி )
இரத்த அழுத்த, நீரிழிவு நோய்கள் நீங்க, மூர்ச்சையிலிருந்து எழுவதற்கும், போதைப் பொருள்களிருந்து மீள ஓதவேண்டிய பதிகம்

[10]நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர், அவர் இருபோதும்;
ஊணொடு கூடிய உட்கும் நகையால் உரைகள் அவை கொள வேண்டா;
ஆணொடு பெண்வடிவு ஆயினர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பூண் நெடு மார்பரோ, பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே?

Back to Top
5 திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.098   நன்று உடையானை, தீயது இலானை,  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருச்சிராப்பள்ளி ; அருள்தரு மட்டுவார்குழலம்மை உடனுறை அருள்மிகு தாயுமானேசுவரர் திருவடிகள் போற்றி )
சுக பிரசவம் அமைவதற்கு ஓதவேண்டிய பதிகம்

[1]நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு
ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே.

[9]அரப்பள்ளியானும் மலர் உறைவானும், அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?

[11]தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்-
ஞானசம்பந்தன்-நலம் மிகு பாடல் இவை வல்லார்
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே.

Back to Top
6 திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.008   வான் உலாவும் மதி வந்து  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருச்சிக்கல் ; அருள்தரு வேனெடுங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு நவநீதநாதர் திருவடிகள் போற்றி )

[1]வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை,
தேன் உலாவும் மலர்ச்சோலை, மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருமான் அடி
ஞானம் ஆக நினைவார் வினைஆயின நையுமே.

[2]மடம் கொள் வாளை குதிகொள்ளும் மணமலர்ப்பொய்கை
சூழ்,
திடம் கொள் மா மறையோர் அவர் மல்கிய சிக்கலுள்
விடம் கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெருமான் அடி
மேவிய
அடைந்து வாழும் அடியார் அவர் அல்லல் அறுப்பரே.

[3]நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள்
வேல் ஒண்கண்ணியினாளை ஒர்பாகன்,
வெண்ணெய்ப்பிரான்,
பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே.

[4]கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில்
செந்து வண்டு இன் இசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்
வெந்தவெண்நீற்று அண்ணல், வெண்ணெய்ப்பிரான், விரை
ஆர் கழல்
சிந்தைசெய்வார் வினைஆயின தேய்வது திண்ணமே.

[5]மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு
தெங்கு துங்கப் பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள்
வெங் கண் வெள் ஏறு உடை வெண்ணெய்ப்பிரான் அடி
மேவவே,
தங்கும், மேன்மை; சரதம் திரு, நாளும், தகையுமே.

[6]வண்டு இரைத்து மது விம்மிய மா மலர்ப்பொய்கை சூழ்,
தெண்திரைக் கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள்
விண்டு இரைத்த மலரால் திகழ் வெண்ணெய்ப்பிரான் அடி
கண்டு இரைத்து, மனமே! மதியாய், கதி ஆகவே!

[7]முன்னு மாடம் மதில்மூன்று உடனேஎரிஆய் விழத்
துன்னு வார்வெங்கணை ஒன்று செலுத்திய சோதியான்,
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான்
அடி
உன்னி நீட, மனமே! நினையாய், வினை ஓயவே!

[8]தெற்றல் ஆகிய தென் இலங்கைக்கு இறைவன், மலை
பற்றினான், முடிபத்தொடு தோள்கள் நெரியவே,
செற்ற தேவன், நம் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி
உற்று, நீ நினைவாய், வினைஆயின ஓயவே!

[9]மாலினோடு அருமாமறை வல்ல முனிவனும்
கோலினார் குறுக, சிவன் சேவடி கோலியும்
சீலம் தாம் அறியார்; திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான்
பாலும் பல்மலர் தூவ, பறையும், நம் பாவமே.

[10]பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலாக்
கட்டு அமண்கழுக்கள் சொல்லினைக் கருதாது, நீர்,
சிட்டன், சிக்கல் வெண்ணெய்ப்பெருமான், செழுமாமறைப்
பட்டன், சேவடியே பணிமின், பிணி போகவே!

[11]கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன், நல்
செந் தண்பூம்பொழில் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான்
அடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர், வான் இடை
வெந்தநீறு அணியும் பெருமான் அடி மேவரே.

Back to Top
7 திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.003   இயல் இசை எனும் பொருளின்  
பண் - கொல்லி   (திருத்தலம் திருப்புகலி -(சீர்காழி ) ; அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருவடிகள் போற்றி )

[1]இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்
புயல் அன மிடறு உடைப் புண்ணியனே!
கயல் அன வரி நெடுங்கண்ணியொடும்
அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே!
கலன் ஆவது வெண்தலை; கடிபொழில் புகலி தன்னுள்,
நிலன் நாள்தொறும் இன்பு உற, நிறை மதி அருளினனே.

[2]நிலை உறும் இடர் நிலையாத வண்ணம்
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும், யாம்;
மலையினில் அரிவையை வெருவ, வன் தோல்
அலைவரு மதகரி உரித்தவனே!
இமையோர்கள் நின் தாள் தொழ, எழில் திகழ் பொழில் புகலி
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே.

[3]பாடினை, அருமறை வரல்முறையால்;
ஆடினை, காண முன் அருவனத்தில்;
சாடினை, காலனை; தயங்கு ஒளி சேர்
நீடு வெண்பிறை முடி நின்மலனே!
நினையே அடியார் தொழ, நெடுமதில் புகலி(ந்)நகர்-
தனையே இடம் மேவினை; தவநெறி அருள், எமக்கே!

[4]நிழல் திகழ் மழுவினை! யானையின் தோல்
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே!
கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப, நல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே!
முடிமேல் மதி சூடினை! முருகு அமர் பொழில் புகலி
அடியார் அவர் ஏத்து உற, அழகொடும் இருந்தவனே!

[5]கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட
உரிமையின், உலகு உயிர் அளித்த நின்தன்
பெருமையை நிலத்தவர் பேசின் அல்லால்,
அருமையில் அளப்பு அரிது ஆயவனே!
அரவு ஏர் இடையாளொடும், அலைகடல் மலி புகலி,
பொருள் சேர்தர நாள்தொறும் புவிமிசைப்
பொலிந்தவனே!

[6]அடை அரிமாவொடு, வேங்கையின் தோல்,
புடை பட அரைமிசைப் புனைந்தவனே!
படை உடை நெடுமதில் பரிசு அழித்த,
விடை உடைக் கொடி மல்கு, வேதியனே!
விகிர்தா! பரமா! நின்னை விண்ணவர் தொழ, புகலித்
தகுவாய், மடமாதொடும், தாள் பணிந்தவர் தமக்கே.

[7]அடியவர் தொழுது எழ, அமரர் ஏத்த,
செடிய வல்வினை பல தீர்ப்பவனே!
துடி இடை அகல் அல்குல்-தூமொழியைப்
பொடி அணி மார்பு உறப் புல்கினனே!
புண்ணியா! புனிதா! புகர் ஏற்றினை! புகலிந்நகர்
நண்ணினாய்! கழல் ஏத்திட, நண்ணகிலா, வினையே.

[8]இரவொடு, பகல் அது, ஆம் எம்மான்! உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன், வழி அடியேன்;
குர, விரி நறுங்கொன்றை, கொண்டு அணிந்த
அர விரிசடை முடி ஆண்டகையே!
அனமென் நடையாளொடும், அதிர்கடல் இலங்கை மன்னை
இனம் ஆர்தரு தோள் அடர்த்து, இருந்தனை, புகலியுளே.

[9]உருகிட உவகை தந்து உடலினுள்ளால்,
பருகிடும் அமுது அன பண்பினனே!
பொரு கடல் வண்ணனனும் பூ உளானும்
பெருகிடும் மருள் எனப் பிறங்கு எரி ஆய்
உயர்ந்தாய்! இனி, நீ எனை ஒண்மலர் அடி இணைக்கீழ்
வயந்து ஆங்கு உற நல்கிடு, வளர்மதில் புகலி மனே!

[10]கையினில் உண்பவர், கணிகநோன்பர்,
செய்வன தவம் அலாச் செதுமதியார்,
பொய்யவர் உரைகளைப் பொருள் எனாத
மெய்யவர் அடி தொழ விரும்பினனே!
வியந்தாய், வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி
உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்கு உடன் இருந்தவனே!

[11]புண்ணியர் தொழுது எழு புகலி(ந்) நகர்,
விண்ணவர் அடி தொழ விளங்கினானை,
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார்,
நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர், சிவன் உலகம்;
இடர் ஆயின இன்றித் தாம் எய்துவர், தவநெறியே.

Back to Top
8 சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.100   தான் எனை முன் படைத்தான்;  
பண் - பஞ்சமம்   (திருத்தலம் திருக்கயிலாயம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

[1]தான் எனை முன் படைத்தான்; அது அறிந்து தன் பொன் அடிக்கே
நான் என பாடல்? அந்தோ! நாயினேனைப் பொருட்படுத்து,
வான் எனை வந்து எதிர்கொள்ள, மத்தயானை அருள்புரிந்து(வ்)
ஊன் உயிர் வேறு செய்தான்-நொடித்தான்மலை உத்தமனே.


[2]ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ-
ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன்,
வானை மதித்த(அ)மரர் வலம்செய்து, எனை ஏற வைக்க
ஆனை அருள் புரிந்தான், நொடித்தான்மலை உத்தமனே?

[3]மந்திரம் ஒன்று அறியேன், மனைவாழ்க்கை மகிழ்ந்து, அடியேன்;
சுந்தர வேடங்களால்-துரிசே செயும் தொண்டன் எனை
அந்தர மால்விசும்பில்(ல்) அழகு ஆனை அருள்புரிந்தது-
உம்தரமோ? நெஞ்சமே!-நொடித்தான்மலை உத்தமனே.

[4]வாழ்வை உகந்த நெஞ்சே! மடவார் தங்கள் வல்வினைப் பட்டு,
ஆழ முகந்த என்னை அது மாற்றி, அமரர் எல்லாம்
சூழ அருள் புரிந்து(த்), தொண்டனேன் பரம் அல்லது ஒரு
வேழம் அருள் புரிந்தான்நொடித்தான்மலை உத்தமனே.

[5]மண்ணுலகில் பிறந்து(ந்) நும்மை வாழ்த்தும் வழி அடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்;
விண்ணுலகத்தவர்கள் விரும்ப(வ்) வெள்ளையானையின் மேல்
என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே.

[6]அஞ்சினை ஒன்றி நின்று(வ்) அலர் கொண்டு அடி சேர்வு அறியா
வஞ்சனை என் மனமே வைகி, வான நன் நாடர் முன்னே!
துஞ்சுதல் மாற்றுவித்து, தொண்டனேன் பரம் அல்லது ஒரு
வெஞ்சின ஆனை தந்தான்நொடித்தான்மலை உத்தமனே.

[7]நிலை கெட, விண் அதிர(ந்), நிலம் எங்கும் அதிர்ந்து அசைய,
மலை இடை யானை ஏறி(வ்) வழியே வருவேன் எதிரே,
அலைகடல் ஆல் அரையன்(ன்) அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச,
உலை அணையாத வண்ணம்-நொடித்தான்மலை உத்தமனே.

[8]அர ஒலி, ஆகமங்கள்(ள்) அறிவார் அறி தோத்திரங்கள்,
விரவிய வேத ஒலி, விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப,
வரம் மலி வாணன் வந்து(வ்) வழிதந்து, எனக்கு ஏறுவது ஓர்
சிரம் மலி யானை தந்தான்நொடித்தான்மலை உத்தமனே.

[9]இந்திரன், மால், பிரமன்(ன்), எழில் ஆர் மிகு தேவர், எல்லாம்
வந்து எதிர்கொள்ள, என்னை மத்தயானை அருள்புரிந்து,
மந்திர மா முனிவர், இவன் ஆர்? என,-எம்பெருமான்
நம்தமர் ஊரன் என்றான்நொடித்தான்மலை உத்தமனே.

[10]ஊழிதொறு ஊழி முற்றும்(ம்) உயர் பொன் நொடித்தான்மலையை,
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன,
ஏழ் இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்,
ஆழி-கடல்(ல்) அரையா! அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே!

9 101 விறல்மாரன் ஐந்து   (திருச்செந்தூர்)  
தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
     மிகவானி லிந்து ...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
     வினைமாதர் தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
     கொடிதான துன்ப ...... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
     குறைதீர வந்து ...... குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
     வழிபாடு தந்த ...... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
     வடிவேலெ றிந்த ...... அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
     மடியாரி டைஞ்சல் ...... களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
     அலைவாயு கந்த ...... பெருமாளே.

Audio/Video Link(s)

Back to Top

10 274 துப் பார் அப்பு   (திருத்தணிகை)  
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தனனத் ...... தனதான

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
     சொற்பா வெளிமுக் ...... குணமோகம்
துற்றா யப்பீ றற்றோ லிட்டே
     சுற்றா மதனப் ...... பிணிதோயும்
இப்பா வக்கா யத்தா சைப்பா
     டெற்றே யுலகிற் ...... பிறவாதே
எத்தார் வித்தா ரத்தே கிட்டா
     எட்டா அருளைத் ...... தரவேணும்
தப்பா மற்பா டிச்சே விப்பார்
     தத்தாம் வினையைக் ...... களைவோனே
தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
     தத்தாய் தணிகைத் ...... தனிவேலா
அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
     வற்பா வைதனத் ...... தணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா
     அப்பா குமரப் ...... பெருமாளே.

Back to Top

11 401 இருவினை அஞ்ச   (திருவருணை)  
தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான

இருவினை யஞ்ச மலவகை மங்க
     இருள்பிணி மங்க ...... மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
     வினதக முங்கொ ...... டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
     களிமலர் சிந்த ...... அடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
     கடுகிந டங்கொ ...... டருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
     திகழ்நகை கொண்ட ...... விடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
     திகழந டஞ்செய் ...... தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
     அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
     அமளிந லங்கொள் ...... பெருமாளே.

Audio/Video Link(s)

Back to Top

12 அபிராமி அந்தாதி - 0 :   கணபதி காப்பு  
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.


Back to Top
13 அபிராமி அந்தாதி - 2 :   பிரிந்தவர் ஒன்று சேர  
துணையும் தொழுந்தெய்வமும், பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும், கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.


Back to Top
14 அபிராமி அந்தாதி - 3 :   குடும்பக் கவலையிலிருந்து விடுபட  
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறிந்தேன் நின்அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே.


Back to Top
15 அபிராமி அந்தாதி - 8 :   பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட  
சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
கந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.


Back to Top
16 அபிராமியம்மை பதிகம் - 1 :   கலையாத கல்வியும், குறையாத வயதும்,  
கலையாத கல்வியும், குறையாத வயதும்,
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும்,
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்,
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும்,
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்,
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே!
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள் வாமி! அபிராமியே!


Back to Top
17 அபிராமியம்மை பதிகம் - 22 :   சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை!  
சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை!
மா தேவி! நின்னைச் சத்யமாய், நித்யம் உள்ளத்தில்
துதிக்கும் உத்தமருக்கு இரங்கி, மிகவும்
அகிலமதில் நோய் இன்மை, கல்வி, தன தானியம்,
அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி,
துணிவு, வாழ் நாள், வெற்றி, ஆகு நல்லூழ், நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்து அருளி, நீ சுக ஆனந்த
வாழ்வு அளிப்பாய்; சுகிர்த குண சாலி! பரி பாலி! அநு கூலி!
திரி சூலி! மங்கள விசாலி!
மகவு நான், நீ தாய், அளிக்க ஒணாதோ? மகிமை வளர் திருக்
கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!


Back to Top
18 அபயாம்பிகை சதகம்‌ - 0 :    
அபயாம்பிகை சதகம்‌ அன்பாய்‌ உரைக்க
உபயசரணம்‌ உதவும்‌ -சபை நடுவுள்‌
ஆடுகின்ற ஐயன்‌ முதல்‌ அன்பாக- -பெற்ற ஒரு
கோடுமுகத்தனை தானை குறித்து

Back to Top
19 அபயாம்பிகை சதகம்‌ - 2 :    
அஞ்சு முகத்தி நவமுகத்தி
ஆறு முகத்தி சதுர்முகத்தி
அலையில்‌ துயிலும்‌ மால்முகத்தி
அருண முகத்தி அம்பரத்தி
பஞ்சா ஷரத்தி பரிபுரத்தி
பாசாங்‌ குசத்தி நடுவனத்தி
பதுமா சனத்தி சிவபுரத்தி
பாரத்‌ தனத்தி திரிகுணத்தி
கஞ்ச முகத்தி கற்பகத்தி
கருணா கரத்தி தவகுணத்தி
கயிலா சனத்தி நவகுணத்தி
காந்தள்‌ மலர்போல்‌ சதுர்கரத்தி
மஞ்சு நிறத்தி பரம்பரத்தி
மதுரச் சிவத்தி மங்களத்தி
மயிலா புரியில்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.

Back to Top
பட்டினத்தார் - - பிழைபொறுத்தல் பதிகம்
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்
நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும்
துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே

நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
Back to Top


This page was last modified on Wed, 03 Jul 2024 06:25:44 +0000
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

mypathigam